For Daily Alerts
Just In
புதிய சட்டசபை வளாக கட்டுமானம்- கருணாநிதி ஆய்வு
சென்னை: புதிய சட்டசபை வளாக கட்டுமானப் பணிகளை முதல்வர் கருணாநிதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இன்று காலை அங்கு வந்த முதல்வர் கருணாநிதி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
தனது வாகனத்தில் இருந்தவாறே கட்டுமானப் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.