For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இணையவெளியில் நமக்கென்று ஒரு 'வீடு'!

By Chakra
Google Oneindia Tamil News

Internet Laptop
நமக்கென்று ஒரு வீடு இருப்பது எவ்வளவு அவசியம்-அத்தியாவசியமாகி விட்டதோ, அதேபோல இணையவெளியில் நமக்கென்று ஒரு 'வெப்சைட்' இருப்பதும் கூட அவசர அவசியமாகி வருகிறது.

முன்பு இன்டர்நெட் என்பது ஒரு தகவல் தொடர்புக்கான விஷயமாக இருந்து வந்தது. ஆனால் இன்று அது ஒரு மீடியம் என்ற அளவுக்கு வளர்ந்து விட்டது.

ஒவ்வொருவரின் தனி வாழ்க்கையிலும் இன்டர்நெட் இன்று முக்கியப் பங்கு வகிக்கிறது. டீ சாப்பிடுவது, காப்பி சாப்பிடுவது போல என கேஷுவலாக இருந்து வந்த இன்டர்நெட் இன்று சாப்பாட்டுக்கு இணையான முக்கியத்துவத்துடன் வளர்ந்து நிற்கிறது.

தனிப்பட்ட, சமூக, அரசியல், பொருளாதார, கற்பனைத் திறன் என பல நிலைகளிலும் இன்று இன்டர்நெட் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அம்சம்.

அனைவரையும் உள்ளடக்கக் கூடிய ஒரே மீடியம் இணையதளம் மட்டுமே.

ஒவ்வொருவரும் இன்று 'வெப்சைட்'களை உருவாக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். முன்பு 'இமெயில் ஐடி' மட்டும் இருந்தால் கெளரவமாக கருதப்பட்டது. இப்போது நமது இணையதளத்தின் பெயரையும் 'விசிட்டிங் கார்டில்' சேர்ப்பது கூடுதல் கெளரவமாக மாறியுள்ளது.

எப்படி ஒரு இமெயில் ஐடியை உருவாக்குவது சுலபமோ, அதேபோல இன்று வெப்செட்டை உருவாக்குவதும் கூட மிக எளிதாகியுள்ளது.

ஏன் நமக்கென்று ஒரு 'வெப்சைட்' தேவைப்படுகிறது என்பதற்கான காரணங்களை இங்கு பார்ப்போம்...

1. வாடகை வீட்டுக்கு சொந்த வீடு தேவலாம்

நமக்கென்று ஒரு வெப்சைட்டை உருவாக்குவது என்பது வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்குக் குடி பெயருவது போலத்தான். இதுவரை பேஸ்புக்கிலும், ட்விட்டர்களிலும், பிளாக்குகளிலும் உங்களை, உங்களது திறமைகள் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தி வந்த உங்களுக்கு, உங்களுக்கே உரித்தான ஒரு இடத்தில், உங்களுக்கு சொந்தமான இடத்தில் இன்னும் விரிவாக பறை சாற்ற முடியும். அதற்கு தேவை ஒரு இணையதளம்.

இது உங்களது இடம். இங்கு உங்களுக்கு கூடுதல் சுதந்திரம் உண்டு. உங்கள் மனதில் இருப்பதை அப்படியே இங்கு கொடுக்க முடியும்-கூடுதல் சவுகரியங்களோடு.

2. சவுகரியமான சிந்தனைப் பரிமாற்றம்

உங்களுக்கென்று ஒரு இணையதளம் இருந்தால் உங்களது சிந்தனைகளை, அனுபவங்களை, அறிவை, ஆர்வத்தை இன்னும் சிறப்பாக பிறருடன் பரிமாறிக் கொள்ள முடியும்.

டிஸ்கஷன் போர்டை உருவாக்கலாம். இதன் மூலம் பல்வேறு விஷயங்களை பலருடன் விவாதிக்க முடியும்.

ஒரு கெஸ்ட் புக்கை வைக்கலாம். இதன் மூலம் உங்களது தளங்களுக்கு வருவோரின் எண்ணங்களையும், கருத்துக்களையும் அறிந்து உங்களை மேம்படுத்த முடியும், அவர்களுடன் ஆரோக்கியமான விவாதத்திற்கு இது வழிவகுக்கும்.

3. குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம்

உங்களுக்காகவே நவீன தொழில்நுட்பங்கள் வாசல் படியில் வந்து காத்துக் கொண்டிருப்பதால், உங்களது இணையதளம் மூலம் நீங்கள் பணம் பார்க்கவும் முடியும். உங்களது இணையதளங்களில் நீங்கள் இடம் பெறச் செய்யும் விளம்பங்கள் (Google Adsense/Adwords ad solutions) உங்களுக்கு வருவாயைத் தேடித் தரும்.

4. முழுமையான கற்பனை சுதந்திரம்

உங்களது வீட்டை உங்களது விருப்பத்திற்கேற்ப எப்படியெல்லாம் அலங்கரிப்பீர்களோ, அதே போல உங்களது இணையதளத்தையும் நீங்கள் நினைத்தபடி வடிவமைக்கலாம், அழகுபடுத்தலாம்.

எழுத்துருக்குள், நிறம், லோகோக்கள் என அனைத்திலுமே உங்களது கற்பனைத் திறனுக்கு முழுமையான சுதந்திரம் இங்கு உண்டு.

5. ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு அழகு

நமது இணையதளங்களுக்கு மெருகூட்டுவது என்பது நமது கையில்தான் உள்ளது. பல பொருட்களில் நாம் நமது பக்கங்களை அழகாக்க முடியும்.

உங்களது இணையதளத்தின் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பொருள் கொடுத்து வடிவமையுங்கள். உதாரணத்திற்கு, உங்களது ஹோம் பேஜில் உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் கொடுக்கிறீர்கள் என்றால், பிற பக்கங்களை உங்களது ஒவ்வொரு விருப்பத்திற்கேற்றவாறு வடிவமைக்கலாம்.

6. 'பிளாக்'கை இணையுங்கள்

பொங்கல் சாப்பிட்டால் கூடவே வடை 'மஸ்ட்' என்பது போல, 'பிளாக்' இல்லாமல் ஒரு இணையதளம் முழுமை அடையாது.

சர்ச் என்ஜின்களும் கூட பிளாக்குகள் மீது அதிக பிரியத்துடன் உள்ளன. எனவே ஒரு பிளாக்கை உங்களது இணையதளத்தில் இணைத்து கூடுதல் பார்வையாள்களை ஈர்த்துப் பிடியுங்கள்.

7. விரலுக்கேத்த வீக்கம்

இது மிகவும் முக்கியம். அதாவது நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ அதற்கேற்றார் போல திட்டமிடுவது. நீங்கள் உங்களது சொந்த விருப்பத்திற்காக வெப்சைட்டை உருவாக்குகிறீர்களோ அல்லது வர்த்தக நோக்குடன் தொடங்குகிறீர்களோ, அது உங்களுக்கு அதிக செலவை வைத்து விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

சரி வெப்சைட் ஆசை வந்து விட்டதா. கவலையே படாதீர்கள், உங்களுக்கான டொமைன்களை, ஆண்டுக்கு வெறும் ரூ. 185 மட்டுமே செலுத்தி இப்போது நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியும்.

ஹோஸ்டிங் வசதி, எக்கச்சக்கமான ஜிகாபைட் இட வசதி, ஒரு இலவச இமெயில் கணக்கு, டேட்டா டிரான்ஸ்பர் வசதி இன்னும், இன்னும் பல வசதிகளுடன்...

பிறகென்ன, கூடுதல் சுவாசக் காற்றுடன் இணையவெளில் சுதந்திரமாக பறக்க ஆரம்பிக்கலாமே...!

உடனே, உங்கள் இணையத்தை பதிவு செய்யுங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X