For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்களத்தில் மட்டுமே இலங்கை தேசிய கீதம்: ராஜபக்சே முடிவுக்கு கருணாநிதி கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் இனி தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு ராஜபக்சே அரசு தடை விதித்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் இந்த முடிவால் ஈழத் தமிழர்களின் மனம் மேலும் வேதனை அடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனி தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது என்றும், சிங்களத்தில் மட்டும் தான் பாட வேண்டும் என்று அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் அமைச்சர்கள் வாய் மூடி மெளனமாக இருந்து விட்டனர்.

இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதால் அங்கு சிங்களம் தவிர தமிழும் ஆட்சி மொழியாக உள்ளது. இதனால் தமிழர் பகுதிகளில் தமிழ் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். சிங்களப் பகுதிகளில் சிங்கள தேசிய கீதம் இசைக்கப்படும்.

பழமை வாய்ந்த இந்த பழக்கத்தை தற்போது ராஜபக்சே அரசு மாற்றுகிறது. இனி அனைத்து பகுதிகளிலும் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என்று கூறியுள்ளார் ராஜபக்சே. லண்டனில் தமிழர்களால் துரத்தப்பட்டு இலங்கைக்கு தப்பி ஓடி வந்த நிலையில், அந்த ஆத்திரத்தில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் சிங்களர்களும், தமிழர்களும் வசித்து வருகின்றனர். அதனால் அந்நாட்டு தேசிய கீதம் இந்நாள் வரை சிஙகளத்திலும், தமிழுலும் பாடப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ராஜபக்சே அரசு அந்த வழக்கத்திற்கு தடை விதித்து இனி இலங்கை தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கான தீர்மானமும் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் ஏடுகள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் உண்மை என்றால் ராஜபக்சே அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே புண்பட்டிருக்கும் தமிழர்களை இந்த செய்தி மேலும் புண்படுத்தும். இலங்கையின் அரசின் இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் கூறினார்.

English summary
North and eastern parts of Sri Lanka is dominated by Tamils. So, in these parts people sing national anthem in Tamil during government functions. As of date Sri Lankan national anthem has been sung in sinhalese and tamil. Now, Rajapakse government has banned the use of tamil and insists the people to sing the anthem only in sinhalese. TN CM has condemned this action of Sri Lankan government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X