For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.500 கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும் அண்ணா சாலை!

By Chakra
Google Oneindia Tamil News

Anna Salai
சென்னை: ரூ.500 கோடி செலவில் சென்னை அண்ணா சாலையை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரை மேம்படுத்தி, உலகின் சிறந்த நகரங்களின் வரிசையில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக அண்ணா சாலை, உள்வட்ட சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய 3 சாலைகள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.

அண்ணா சாலையை மேம்படுத்த மட்டும் ரூ. 500 கோடி செலவிடப்படவுள்ளது. சாலையின் இரு புறமும் நடைபாதை அகலப்படுத்தப்படவுள்ளது. உள்வட்ட சாலை ரூ.300 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.

இதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணி ரூ. 90 லட்சத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பணி விரைவில் தொடங்க உள்ளன. ஆய்வுப் பணிகளுக்காக உலக வங்கி ரூ.30 லட்சம் நிதி அளித்துள்ளது. மீதி ரூ. 60 லட்சத்தை நெடுஞ்சாலைத் துறை அளிக்கும்.

இந்த சாலைகளை மேம்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ளும்.

இது தவிர சென்னையின் மேலும் 30 முக்கிய சாலைகளையும் உலகத் தரத்துக்கு உயர்த்தும் திட்டத்தை மாநகராட்சி மேற்கொள்ளவுள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் ரூ. 225 கோடி செலவில் செய்து தரப்படவுள்ளன. இதற்கான திட்ட அறிக்கையை வரும் 15ம் தேதி தமிழக அரசிடம் மாநகராட்சி சமர்பிக்கவுள்ளது.

English summary
Government has planned to improve Inner Ring Road, Anna Salai, Poonamallee High Road in Chennai to international standard. These roads will have better traffic flow with superior pedestrian facilities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X