For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வயதானவர்கள் எங்கும் ஏறி எங்கும் இறங்கும் இலவச பஸ் பாஸ் திட்டம் என்னவாகும்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Tn Government Bus
சென்னை : பேருந்து கட்டண உயர்வு இன்று காலைமுதலே அமலுக்கு வந்துள்ள நிலையில் சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த வயதானவர்கள் எங்கும் ஏறி எங்கும் இறங்கும் இலவச பஸ் பாஸ் திட்டம் உள்ளிட்ட பல்வேறு இலவச பஸ் பயணத் திட்டங்கள் என்னவாகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய முதலமைச்சர் நேற்று அதிரடியாக பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவித்தார்.

வியாழக்கிழமை மாலை அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு இன்று காலை முதலே அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக அறிவித்த வயதானவர்கள் எங்கும் ஏறி எங்கும் இறங்கும் இலவச பஸ்பாஸ் திட்டம் அமலாகுமா? அல்லது கிடப்பில் போடப்படுமா? என்பதே அனைவரின் கேள்வி.

''58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்''

சட்டசபைத் தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் முக்கியமாக இடம் பெற்றிருந்தது 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நகரங்களிலும், கிராமங்களிலும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். எங்கும் ஏறி எங்கும் இறங்கும் வகையில் இதை அவர்கள் பயன்படுத்தலாம் என்று அறிவித்தார் ஜெயலலிதா.

தற்போது இந்த பஸ் பாஸ் திட்டம் சொன்னபடி அமலாகுமா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் மூழ்கிப் போயுள்ளதாக முதல்வர் கூறியுள்ளதால், வயதானவர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டம் உடனடியாக அமலுக்கு வருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அப்படியே வந்தாலும் அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

English summary
Tamil Nadu chief minister on Thursday announced that the minimum fare would go up from 2 to 3 and that the maximum would go up from 12 to 14. The bus fares were last revised in 2001.
 Commuters are not happy, understandably , with the increase in tariff, but they want the service quality to go up with the ticket rates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X