For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமேதி தொகுதியில் பிரியங்கா கணவர் வதேராவை தடுத்த அதிகாரி அதிரடி மாற்றம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் அமேதி சட்டப்பேரவை தொகுதியில் பிரியங்கா காந்தியின் கணவர் வதேரா நடத்திய இருசக்கர வாகன பேரணியை தடுத்த தேர்தல் அதிகாரியை கோவாவுக்கு தூக்கி விட்டனர்.

அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வதேரா நடத்திய இருசக்கர வாகன பேரணியில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களுக்கு கூடுதலாக இடம்பெற்றிருந்ததால் தேர்தல் அதிகாரி பவான் சென் அப்பேரணியைத் தடுத்தார்.

அத்துடன் பவான் சென் விட்டுவிடவில்லை. அமேதி காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து என்ன நடந்தது என்று தெரியவில்லை. சுதந்திரமாக செயல்படுவதாக சொல்லிக் கொள்ளும் தேர்தல் ஆணையம் பவான் சென்னை அதிரடியாக கோவாவுக்கு மாற்றிவிட்டது.

சும்மனாச்சுக்கும்.....

இருப்பினும் பவான் சென் மாற்றம் இயல்பான நடவடிக்கையே என்று தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.

கோவாவில் அவர் துணை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வதேராவுக்காகத்தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டாரா என்ற கேள்விக்கு, இரண்டும் ஒரே சமயத்தில் நிகழ்ந்துவிட்டதால் ஒரு வேடிக்கையான தற்செயல் நிகழ்வு என்று சிரித்துக் கொண்டே மழுப்பியுள்ளார்.

ஆட்டத்துக்கு வருவதற்கு முன்பே ஆட்டம் காட்டுகிறாரே வதேரா!

English summary
The Election Commission is trying to steer clear of a controversy over its order to transfer a poll observer who had stopped Robert Vadra’s motorcycle rally in Amethi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X