For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்லி. கூட்டு குழு முன்பு ஆ.ராசாவை அழைப்பது அரசியல்சாசனத்துக்கு எதிரானது: பி.சி. சாக்கோ

By Mathi
Google Oneindia Tamil News

திருச்சூர்: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பாக முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவை அழைப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று அக் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ கூறினார்.

திருச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய சாக்கோ, ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ. ராசா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அப்படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சாட்சியாக நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பாக விசாரணைக்கு அழைக்க முடியாது. அப்படி அழைப்பது என்பது அரசியல் சாசனத்தின் 20வது பிரிவுக்கும் எதிரானது. என்னை எதிர்க்கட்சிகள் பதவி விலகக் கோருவது அரசியல் நாடகம்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் அடுத்தக்கூட்டம் ஜூன் முதல் வாரம் நடைபெறும் என்றார் அவர்.

English summary
JPC Chairman PC Chacko has said it will be "unconstitutional" to summon former Telecom Minister A Raja, prime accused in the 2G spectrum case, before the Joint Parliamentary Committee to take evidence, as it would be an "infringement" of Article 20 of the Constitution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X