For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் குழந்தைகளை தத்தெடுக்க தடை

Google Oneindia Tamil News

China ban on adopting abandoned children
பெய்ஜிங்: அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கு தடை விதித்து சீன அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே, மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது சீனா. இந்நிலையில் முறையற்ற வழிகளில் குழந்தைப் பெறுவது, அதாவது கள்ளத்தொடர்பில் அல்லது திருமணம் ஆகாமல் குழந்தைப் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.

அதனால் முதலில் திருமணமாகாமல் குழந்தைப் பெறுபவர்களுக்கு சமூக வரி என உத்தரவு ஒன்றை வெளியிட்டது அரசு. ஆனபோதும், முறையற்ற வழிகளில் பிறக்கும் குழந்தைகளை அனாதைகளாக அலைய விடும் அவலம் சீனாவில் தொடரத்தான் செய்கிறது.

சமீபத்தில், கள்ளத் தொடர்பில் பிறந்த குழந்தையை கழிவறையில் வீசிச் சென்ற கொடூரமே அதற்கு நல்லதொரு உதாரணம். இந்நிலையில், குழந்தைகள் தத்தெடுப்பில் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற சீன அரசு உத்தரவிட்டது. பின் அதன் தொடர்ச்சியாக அனாதைகளாக அல்லது ஆதரவற்றுத் திரியும் குழந்தைகளைத் தனியாரோ அல்லது குழுவினரோ தத்து எடுக்கக் கூடாது என புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது சீனா.

தடையை மீறித் தத்து எடுப்பவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது சீன அரசு.

English summary
CHINA has announced individuals and groups are banned from privately adopting abandoned infants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X