For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரியை மையமாக வைத்து இரண்டாக வெட்டி தமிழகத்தைப் பிரிக்கலாம்-. அன்பரசு ஐடியா!

Google Oneindia Tamil News

சென்னை: திருச்சி காவிரி ஆற்றை மையமாகக் கொண்டு தமிழகத்தை இரண்டாகப் பிரித்து சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வட தமிழகம் என்றும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் என்றும் தமிழ்நாட்டைப் பிரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு கூறியுள்ளார்.

இதே போலத்தான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், மூமுக தலைவர் டாக்டர் சேதுராமனும் ஏற்கனவே கூறி வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம்.

தெலுங்கானா பிறப்பதைத் தொடர்ந்து தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் இதுகுறித்து இதுவரை முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக போன்றவை கருத்து தெரிவித்ததில்லை.

இந்த நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி....

தெலுங்கானாவின் பல்லாண்டு போராட்டம்

தெலுங்கானாவின் பல்லாண்டு போராட்டம்

ஆந்திரா மாநிலத்தை பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க வேண்டுமென்று அம்மாநில மக்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். அதற்கு தீர்வு காணும் வகையில் சோனியாகாந்தியின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் மூலம் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை வரவேற்கிறேன். அதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

முன்பு 6 பெருசு.. 6 சிறுசு..

முன்பு 6 பெருசு.. 6 சிறுசு..

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 6 பெரிய மாநிலங்களும், 6 சிறிய மாநிலங்களும்தான் இருந்தன. சுதந்திரம் அடைந்த பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் இந்தியா வளர்ச்சிக்காண வேண்டுமானால் நிர்வாக வசதிக்காக மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பெரிய மாநிலங்கள் இரண்டு மூன்றுகளாக பிரிக்கப்பட்டன. அதன்பிறகு மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டது.

அப்படித்தான் உருவானது தமிழ்நாடு

அப்படித்தான் உருவானது தமிழ்நாடு

அந்த அடிப்படையில்தான் சென்னை மாகாணம் கர்நாடக, கேரளா, ஆந்திரம், தமிழ்நாடு என்று நான்கு மாநிலங்களாக உருவானது. இப்படி பிரிக்கப்படவில்லையென்றால் இன்றைக்கு பெரிய வளர்ச்சி கண்டிருக்காது.

முதலில் 13 மாவட்டம்தான்.. இன்றோ 32

முதலில் 13 மாவட்டம்தான்.. இன்றோ 32

அதேபோன்றுதான் தமிழகத்தில் ஆரம்பத்தில் 13 மாவட்டங்கள் தான் இருந்தன. நிர்வாக வசதிக்காக இன்றைக்கு 32 மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. இவை அனைத்தும், வளர்ச்சி, மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்பட்டவை.

இந்தியாவில் 3 தான் பெரிய மாநிலங்கள்

இந்தியாவில் 3 தான் பெரிய மாநிலங்கள்

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலங்களாக இருப்பவை உத்திரப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு தான். ஆந்திரா இப்பொழுது பிரிக்கப்பட்ட பிறகு இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடாகும். மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சமாகும், 234 சட்டமன்ற தொகுதிகள் 39 பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது.

எல்லா வகையிலும் முதல் பெரிய மாநிலம் நாம்தான்

எல்லா வகையிலும் முதல் பெரிய மாநிலம் நாம்தான்

உத்திரப் பிரதேசத்திலிருந்து பார்த்தால் எல்லா வகையிலும் இப்பொழுது தமிழ்நாடுதான் பெரிய மாநிலங்களில் முதல் இடத்தில் உள்ளது.

விதர்பா - கூர்க்காலாந்து - ஹரித் பிரதேசம்

விதர்பா - கூர்க்காலாந்து - ஹரித் பிரதேசம்

மராட்டிய மாநிலத்தை இரண்டாக பிரித்து 'விதர்பா' மாநிலமும், மேற்கு வங்காளத்தை பிரித்து 'கூர்காலாந்து' என்றும், உத்திரப்பிரதேசத்தை பிரித்து 'ஹரித் பிரதேசம்' என்றும் மாநிலங்களை பிரிக்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

உ.பியைக் கூட 4 ஆக பிரிக்கக் கோருகிறார் மாயா

உ.பியைக் கூட 4 ஆக பிரிக்கக் கோருகிறார் மாயா

உத்திரப்பிரதேசத்தை 4 மாநிலங்களாக கூட பிரிக்கலாம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தை பிரித்து 'குடகு' மாநிலம் அமைக்க வேண்டும் என்றும் முன்பு கோரிக்கைகள் எழுந்தன.

ஏன் தமிழகத்தை பிரிக்கக் கூடாது என்று கேட்கிறேன்

ஏன் தமிழகத்தை பிரிக்கக் கூடாது என்று கேட்கிறேன்

இவைகளை ஒப்பிடும்பொழுது நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டு மாநிலங்களாக பிரிக்கவேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்.

அட, மூன்றாக கூட பிரிக்கலாமே...

அட, மூன்றாக கூட பிரிக்கலாமே...

மூன்றாக கூட பிரித்தால் என்ன? என்று தமிழக மக்களே ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்கும் நிலை எதிர்காலத்தில் வரும்.

வட தமிழகத்தில் குவியும் தென் தமிழர்கள்

வட தமிழகத்தில் குவியும் தென் தமிழர்கள்

தமிழகத்திற்கு சென்னை தலைநகரமாக இருப்பதால் தென்தமிழகத்தை சேர்ந்தவர்கள் தொழில், வேலைவாய்ப்பை முன்னிட்டு வடதமிழகத்தில் நெருக்கமாக வந்து குடியேறி விட்டார்கள். இதனால் சுற்றுசூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறி விவசாயம் அடியோடு பாதிப்பு, இடநெருக்கடி, நிர்வாக திறன், நேரமின்மை, குறிப்பாக ஒருபக்கம் வளர்ச்சி, ஒருபக்கம் தொய்வு என்ற நிலை உருவாகியுள்ளது.

தொகுதிகள் கூடிப் போய் விட்டன

தொகுதிகள் கூடிப் போய் விட்டன

வட தமிழகத்தில் மக்கள் பெருக்கத்தால் சட்டமன்ற தொகுதிகள் தென்மாவட்டங்களில் குறைந்து வடதமிழகத்தில் கூடுதலாக தொகுதிகள் உருவாகியுள்ளன. இன்னும் சொல்லபோனால் போக்குவரத்து, காலவிரயத்தை கருத்தில் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரையில் தொடங்கப்பட்டது.

அடுக்கிக் கொண்டே போகலாம்

அடுக்கிக் கொண்டே போகலாம்

இப்படி எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சீரான வளர்ச்சி காணவும் சிறிய மாநிலம் சிறந்த நிர்வாகம் என்கிற அடிப்படையில் திருச்சி காவேரிக்கரையை மையமாக வைத்து தமிழகத்தை இரண்டாக பிரித்து சென்னையை தலைநகரமாக கொண்டு 'வடதமிழகம்' என்றும், மதுரையை தலைநகரமாக கொண்டு 'தென்தமிழகம்' அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறேன்.

நிதி ஆதாரம் கூடுதலாக கிடைக்கும்

நிதி ஆதாரம் கூடுதலாக கிடைக்கும்

தமிழகத்தை இரண்டு மாநிலங்களாக பிரிப்பதன் மூலம் மத்திய அரசினுடைய நிதி ஆதாரங்கள் கூடுதலாக கிடைப்பதோடு, திட்டங்களும் அதிகளவில் வரும். இதன் மூலம் தமிழக மக்கள் பயனடைவார்கள்.

ராமதாஸே சொல்லிட்டாரே...

ராமதாஸே சொல்லிட்டாரே...

இதே கோரிக்கையை முன்பு மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் சேதுராமன், இறைவன் போன்றவர்கள் வைத்தனர். குறிப்பாக தென்மாநில மக்கள் இந்த கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

காவிரிக் கரையிலிருந்து உடையுங்கள்

காவிரிக் கரையிலிருந்து உடையுங்கள்

தமிழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு இயற்கையாகவே எல்லைக்கோடாக திருச்சி காவிரிக்கரை அமைந்துள்ளது எனவே எந்த பாகுப்பாடும் இன்றி இரண்டாக பிரிக்கலாம். தமிழகத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி 'மாநிலப்பிரிவு மக்கள் இயக்கம்' ஒன்றை நடத்தவுள்ளோம். முதலில் கையெழுத்து இயக்கம், இது சம்பந்தமாக டெல்லிக்கு குழுவாக சென்று சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம் என்றார் அவர்.

English summary
Senior Congress leader Anbarasu has urged the partition of Tamil Nadu into two states for administrative comfort.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X