Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகன் மேல சத்தியம் செய்வீங்களா? மொட்டையடித்து சீமானுக்கு மீண்டும் நடிகை விஜயலட்சுமி சவால்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: என்னை தெரியாது என மகன் பிரபாகரன் மேல சத்தியம் செய்ய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தயாரா? என நடிகை விஜயலட்சுமி மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்மை ஏமாற்றிவிட்டதாக பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டு வருகிறார் நடிகை விஜயலட்சுமி. ஆனால் விஜயலட்சுமி குறித்து சீமான் எந்த கருத்தும் தெரிவிப்பது இல்லை. பொதுவாக அவர் யார் என்றே தெரியாது என ஒருமுறை பதிலளித்துவிட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீமான்.

நடிகை விஜயலட்சுமி

ஆனால் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினரால் தாம் மிரட்டப்பட்டு கர்நாடகாவுக்கு விரட்டியடிக்கப்பட்டதாக வீடியோக்கள் மூலம் குற்றம்சாட்டி வருகிறார் விஜயலட்சுமி. இந்த நிலையில் ஒரு இடைவெளிக்குப் பின்னர் மொட்டை அடித்த தலையுடன் மீண்டும் நடிகை விஜயலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் விஜயலட்சுமி கூறி இருப்பதாவது:

 திமுகவுக்கு அட்வைஸ்

திமுகவுக்கு அட்வைஸ்

தமிழ் தேசத்துக்கு இருக்கக் கூடிய ஒரே நம்பிக்கை, அடையாளம் என் தலைவன் என்கிறவர்களுக்கு இந்த வீடியோ கிடையாது. இது அறிவாளிகளுக்கான வீடியோ. தமிழக மக்கள் மீது இருந்த அன்பால்தான் நான் மிகப் பெரிய போர் நடத்தினேன். நாம் தமிழர் கட்சிக்கும் சீமானுக்கும் ஆளும் திமுக முக்கியத்துவம் தருவதே முட்டாள்தனம். விவாத மேடைகளில் என்னை குறிப்பிட்டு பேசியதால் திமுகவினர் மூக்குடைபட்டதாக சொல்கின்றனர்.

 நியாயம் கிடைக்கவில்லை

நியாயம் கிடைக்கவில்லை

ஆனால் உண்மையில் சீமானின் மூக்கை உடைத்தது இந்த விஜயலட்சுமி மட்டும்தான். ஒரு பெண்ணிடம் மூக்குடைபட்டதை ஒப்புக் கொள்ள முடியாத ஆணாதிக்கவாதி சீமான். ஒரு பெண்ணுக்கு எப்படி எல்லாம் அச்சுறுத்தல் தர முடியுமோ தந்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்கள். இன்று நான் பெங்களூருவில் இருப்பதால்தான் என் குரல் ஓங்கி இருக்கிறது. ஆனால் தமிழ் மக்கள் எதனையுமே மறக்கமாட்டார்கள். விஜயலட்சுமி தன்னுடைய போரில் ஜெயித்துவிட்டார். ஆனால் காவல்நிலையத்திலும் நீதிமன்றத்திலும் நியாயம் கிடைக்கவில்லை.

 சீமானுக்கு சவால்

சீமானுக்கு சவால்

அதனால்தான் மக்களிடம் நான் பேசுகிறேன். அன்று அதிமுக, ஒரு பெண்ணுக்காக நிற்காமல் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சீமானை கைது செய்யப் போகிற நேரத்தில் எனக்கு பிரஷர் கொடுத்து புகாரை வாபஸ் வாங்க வைத்தனர். அதோடு முடிந்திருந்தால் நான் தோற்றுப் போயிருப்பேன். ஆனால் அப்படி எல்லாம் நான் இருக்கவில்லை. யாருக்கும் தெரியாத ஆதாரங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டேன். அதாவது சீமானின் வீடியோக்கள், போட்டோக்கள் குறித்து நான் வெளியிட்டிருந்தேன். அது குறித்து யாரும் வாய் திறக்க முடியாது. என்னை தெரியாது என்று தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் முன்னிலையிலோ, மகன் பிரபாகரன் மீதோ சீமான் சத்தியம் செய்து சொல்ல தயாரா? இவ்வாறு நடிகை விஜயலட்சுமி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+