Thakkali Srinivasan Death: திகிலூட்டிய "ஜென்ம நட்சத்திரம்" பட இயக்குநர் தக்காளி சீனிவாசன் மறைவு!
பெங்களூர்: திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான தக்காளி சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகில் படத் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, இசை, வசனம் என பன்முகத் திறமை கொண்டவர்களில் தக்காளி சீனிவாசனும் ஒருவர். இவர் கடந்த 1987ஆம் ஆண்டு பிரபு, அம்பிகா நடிப்பில் வெளியான "இவர்கள் வருங்கால தூண்கள்" என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து கதாநாயகனாக பிரபு, சரண்யாவை வைத்து "மனசுக்குள் மத்தாப்பு" படத்தையும் தயாரித்திருந்தார். அந்த படம் வெற்றி அடைந்தது. வேலு பிரபாகரன் இயக்கிய "நாளைய மனிதன்" படத்தில் முதல்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து வேலுபிரபாகரனின் "நாளைய மனிதனின்" இரண்டாம் பாகமான "அதிசய மனிதன்" படத்திலும் இசையமைத்தார். தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என இரு துறைகளிலும் வென்ற சீனிவாசன் திடீரென படத்தின் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
"ஜென்ம நட்சத்திரம்" என்ற திரில்லிங் படத்தை இயக்கினார். இந்த படத்தை பார்த்த பல சிறுவர்கள் இரவு நேரத்தில் தனியாக எழுந்து சிறுநீர் கழிக்க கூட பயந்தார்கள். அந்த அளவுக்கு ஸ்லோவாக படம் போனாலும் அதில் திகில் காட்சிகள் இருந்தன.
"விட்னஸ்" என்ற படத்தையும் தயாரித்த சீனிவாசன், அந்த படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் சித்ரா லட்சுமணன் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்த "சூரசம்ஹாரம்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு படங்கள் தயாரிப்பதை நிறுத்திக் கொண்ட அவர் பெங்களூரில் ஒரு ஆசிரமத்தை நடத்தி அங்கு தத்தெடுத்த குழந்தைகளுடன் சேவை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.
இவர் தக்காளி போல் செக்கசெவேல் என இருந்ததால் இவரை தக்காளி சீனிவாசன் என அழைத்தனர் என சொல்கிறார்கள். ஆனால் மற்றும் சிலரோ, சீனிவாசன் என்ற பெயரில் அப்போது நிறைய பேர் சினிமா துறையில் இருந்ததால் வேறுப்படுத்திக் காட்ட தக்காளி என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications