பெங்களூரில் கர்ப்பிணி தாய் 'போட்டோ ஷூட்' ஆர்வம்.. 3 வயது குழந்தைக்கு இப்படியா ஆகணும்
பெங்களூர்: பெங்களூர் ஜே.பி.நகரில் வசித்து வரும் சரண்ராஜ் தொழிலதிபர் ஆவார். இவரது மனைவி ஸ்வாதி. இந்த தம்பதிக்கு 3 வயதில் லட்சுமேஷ்வர் என்ற ஆண் குழந்தை இருந்தது. ஸ்வாதி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஸ்வாதி பெங்களூர் புறநகரில் 'போட்டோ ஷூட்' எடுக்க முடிவு செய்தார். அப்போது 3 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம் ஆடிப்போக வைத்துள்ளது.
இன்றைக்கு திருமணத்திற்கு முன்பு 'போட்டோ ஷூட் எடுப்பது வழக்கமாகிவிட்டது. பலரும் திருமணத்திற்கு முன்பு திரைப்படம் போல் டிரெய்லரே எடுக்கிறார்கள். சினிமா பாணியில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அதேபோல் திருமணத்திற்கு பின்பும் ஹனிமூன் வரை பல முறை போட்டோ ஷூட் நடத்தி ஆல்பம் போட்டு வைத்து நினைவுகளை சேமிக்கிறார்கள்.

இன்று பலருக்கும் விருப்பம்
அதேபோல் பல தொழில் அதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கர்ப்பமாக இருக்கும் போதும், அதாவது வளைகாப்பின் போதும் போட்டோ ஷூட் எடுக்கிறார்கள். அப்படி போட்டோ ஷூட் எடுக்கும் இடங்கள், நீர் நிலைகள், பூங்காக்களாக உள்ளன. அப்படித்தான் பெங்களூரில் கர்ப்பிணி தாய் போட்டோ ஷூட்டின் போது தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது குழந்தை உயிரிழந்தான்.
ஆண் குழந்தை
பெங்களூர் ஜே.பி.நகரில் தொழில் அதிபர் சரண்ராஜ். இவரது மனைவி ஸ்வாதி. இந்த தம்பதிக்கு 3 வயதில் லட்சுமேஷ்வர் என்ற ஆண் குழந்தை இருந்தது. ஸ்வாதி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். தற்போது ஸ்வாதி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். சரண்ராஜ் தொழில் அதிபர் ஆவார். அவர் தொழில் விஷயமாக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் 'போட்டோ ஷூட்' எடுக்க ஸ்வாதி முடிவு செய்துள்ளார்.
சம்மதம்
இதற்கு சரண்ராஜும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, தனது தோழியுடன் 'போட்டோ ஷூட்' எடுக்க பெங்களூரு புறநகர் மாவட்டம் மாதநாயக்கனஹள்ளி அருகே உள்ள கிட்டனஹள்ளிக்கு தனது 3 வயது குழந்தையுடன் ஸ்வாதி சென்றுள்ளார். கிட்டனஹள்ளியில் உள்ள பூங்காவில் வைத்து ஸ்வாதியை, அவரது தோழி பல்வேறு கோணத்தில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.
போட்டோ ஷூட்
அந்த சந்தர்ப்பத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தரை மட்டத்திலான தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டது. இதனால் தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து விட்டது. இதுபற்றி தெரியாமல் ஸ்வாதி போட்டோ ஷூட் எடுப்பதில் மும்முரமாக இருந்துள்ளார். போட்டோ ஷூட்டை முடித்துவிட்டு தனது குழந்தையை காணவில்லை என்று ஸ்வாதி தேடினார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications