பணமதிப்பு நீக்கம்: மோடி இன்னொரு மொராஜி தேசாய்?

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: பணமதிப்பு நீக்கம் தோல்வி என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். பணமதிப்பு நீக்கத்தின் மூலம் மோடி இன்னொரு மொராஜி தேசாயாக உருவெடுத்துள்ளார் என்று விமர்சிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 8ஆம் தேதி 500 - 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

ஆனால், இந்த நடவடிக்கையால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வர்த்தகர்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். இதனால் பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட தினமான நவம்பர் 8ம் தேதி ஒராண்டு ஆகும் நிலையில், அன்றைய தினத்தை கருப்பு தினமாக கடைப்பிடிக்க எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

பணம் செல்லாதது என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டது இது முதன்முறையல்ல. 1978ல் மொராஜி தேசாய் அரசு, பணம் செல்லாது என்ற அறிவிப்பை மீண்டும் வெளியிட்டது. இப்போது போல அப்போது சேட்டிலைட் சேனல்கள் இல்லை. ஆல் இந்தியா ரேடியோ மூலம் பேசினார் அப்போதய பிரதமர் மெராஜி தேசாய்.

செல்லாத ரூபாய் நோட்டு

செல்லாத ரூபாய் நோட்டு

ஜனவரி 16, 1978 ஆம் ஆண்டு மக்களிடம் உரையாற்றினார் அப்போதைய பிரதமர் மொராஜி தேசாய். அரசு சார்பில் புழக்கத்தில் விடப்பட்ட 1000, 5000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனால் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களை பாதித்த திட்டம்

மக்களை பாதித்த திட்டம்

1970-ல் வான்ச்சு கமிட்டி கொடுத்த பரிந்துரையை, 1978-ல் பிரதமர் மொராஜி தேசாய் ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி ஒப்புதல் தந்த பின்னர் மொராஜி அறிவித்தார். இந்தத் திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. ஆனாலும் பெருமளவில் கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சாமானிய மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். .

வாஜ்பாய் - மோடி

வாஜ்பாய் - மோடி

2000 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இதனை தளர்த்தி ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என அறிவித்தார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடியும் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை தடை செய்தார்.

டிவி மூலம் அறிவித்த மோடி

டிவி மூலம் அறிவித்த மோடி

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தொலைக்காட்சி மூலம் பேசிய மோடி, மத்திய அரசின் சில முக்கிய முடிவுகளை பற்றி உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். கடந்த சில பத்தாண்டுகளாக நாட்டில் ஊழலும் கறுப்புப் பண பதுக்கலும் அதீத வளர்ச்சி பெற்று வருகிறது. ஏழ்மையை ஒழிப்பதில் தடையாக இருப்பவை இரண்டு மட்டுமே. அது மட்டுமல்ல, கள்ள நோட்டு புழக்கமும் தீவிரவாதத்துக்கு நிதியுதவியும் அச்சுறுத்துக்கின்றன. அதனால் சில கடினமான முடிவுகளை எடுக்க இருக்கிறேன்.

தியாகம் செய்ய தயாராகுங்கள்

தியாகம் செய்ய தயாராகுங்கள்

என தருமை நண்பர்களே, இன்று இரவு முதல் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இதனால் சாமானியர்கள் நிறைய கஷ்டங்களை சந்திக்கவேண்டி வரும். ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதற்கு சாமானியர்கள் இந்த கஷ்டங்களை பொறுத்துக் கொள்ளவேண்டும். குடிமக்கள் எப்போதும் நாட்டுக்காக தியாகங்களை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். நாட்டை சுத்தப்படுத்துவதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

பொறுத்துக்கொண்ட மக்கள்

பொறுத்துக்கொண்ட மக்கள்

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லப்பட்ட அந்த இரவில் மக்கள் ஏடிஎம்களை நோக்கி படையெடுத்தனர். பணத்தை மாற்ற மக்கள் வரிசையில் நின்று அடைந்த துன்பம் சொல்லி மாளாது. கிட்டத்தட்ட ஆறு மாத காலம் சாமானிய மக்கள் படாத துன்பமில்லை. சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டன, வணிகம் பாதிக்கப்பட்டது. ஆனால் மக்கள் பொறுத்துக் கொண்டார்கள். எந்த வன்முறையும் இல்லை

மோடி சொன்ன காரணங்கள்

மோடி சொன்ன காரணங்கள்

கறுப்புப் பணம் ஒழிப்பு என்று மோடி சொன்ன காரணம்தான் மக்களை இவ்வளவு அமைதியாக அந்த கஷ்டத்தை கடக்கவைத்தது. பணமதிப்பு நீக்கத்திற்கு மோடி நான்கு முக்கிய காரணங்களை முன்வைத்தார். ஊழல் ஒழிப்பு, கறுப்புப் பண ஒழிப்பு, கள்ளநோட்டுகளை ஒழிப்பது, தீவிரவாதத்துக்கு வரும் நிதியை ஒழிப்பது என காரணங்களை முன்வைத்து அறிவித்தார்.

 ரூ.400 கோடி கள்ள நோட்டுக்கள்

ரூ.400 கோடி கள்ள நோட்டுக்கள்

2015-ம் ஆண்டு தேசிய விசாரணை நிறுவனம் வழங்கிய தகவல்படி, இந்தியாவில் மொத்தம் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவித்தது. அதாவது மொத்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் 0.028 சதவீதம் கள்ளநோட்டுகளாக உள்ளன. அதிலும் குறிப்பாக உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளே அதிகம் கள்ளநோட்டுகளாக உள்ளன என்று என்ஐஏ கூறியது.

பணம் மீட்கப்பட்டதா?

பணம் மீட்கப்பட்டதா?

ஆனால் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வங்கிக்கு திரும்பிய 1,000 ரூபாய் நோட்டுகளில் 0.0007 சதவீதம் மட்டுமே கள்ளநோட்டுகள். 500 ரூபாய் நோட்டுகளில் சுமார்0.002 சதவீதம் மட்டுமே கள்ளநோட்டுகள். மொத்த கள்ளநோட்டுகள் புழக்கத்தில் மிக குறைவான சதவீதமே வந்துள்ளது.

எதிர்கட்சிகள் விமர்சனம்

எதிர்கட்சிகள் விமர்சனம்

கறுப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது, டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகப்படுத்துவது என எத்தனை இலக்குகளை பணமதிப்பு நீக்கத்துக்கு மத்திய அரசு கூறிவந்தது. ஆனால் கடந்த ஓராண்டில் இந்த இலக்குகளை ஒன்றை கூட மத்திய அரசால எட்டமுடியவில்லை. மொத்தத்தில் மோடியும் ஒரு மொராஜிதேசாய்தான் என்கின்றனர் எதிர்கட்சியினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The country is getting ready to celebrate the first anniversary of the demonetisation day on 8 November, it is inevitable that the question will be asked: has the momentous decision confirmed Narendra Modi’s place in India’s history? On 16 January 1978, the Morarji Desai government demonetised Rs 1,000, Rs 5,000 and Rs 10,000 currency notes.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற