41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே
சென்னை: தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், அரசியல் களம் இப்போதே கொதிக்கத் துவங்கி விட்டது.. வழக்கமாக தேர்தல் என்றாலே போட்டி பெரும்பாலும் இரண்டு துருவங்களுக்குள் தான் சுருங்கி விடும்.. ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள சில கணக்குகளையும், கள தகவல்களையும் பார்த்தால் இந்த முறை அந்த நிலைமை அப்படியே தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. பாரம்பரிய அரசியல் அமைப்பில் சில கவனிக்கத்தக்க மாற்றங்கள் உருவாகி வருவதை இந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.. அதற்கு இதோ ஒரு முக்கியமான புள்ளிவிவரம்..!!
அரசியல் பகுப்பாய்வு நிறுவனமான பாராவீல் சமீபத்தில் ஒரு விரிவான ஆய்வு நடத்தியிருக்கிறது.. ஹைதராபாத்தை சேர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த அரசியல் நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் தேர்தல் கணிப்பு நிறுவனமான "கேகே சர்வேஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ்" நிறுவனத்தின் ஒரு அங்கமாகவே இந்த பாராவீல் செயல்பட்டு வருகிறது..

70 லட்சம் வாக்காளர்கள்
இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி சுமார் 70 லட்சம் வாக்காளர்களிடம் கருத்து சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தபட்சம் 30000 பேரிடம் மாதிரி கணக்கெடுப்பு செய்யப்பட்டு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது..
அதன்படி தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக சுமார் 41.5% வாக்கு ஆதரவுடன் முன்னிலை வகிக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.. அஇஅதிமுக 36.2% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..
13.6 சதவீதம் தவெக விஜய்
இந்த இரண்டு பெரிய கட்சிகளுக்கு பிறகு 3வது இடத்தில் சமீபத்தில் அரசியல் அரங்கில் காலடி வைத்துள்ள தவெக இருப்பதாக அந்த கணக்கெடுப்பு கூறுகிறது.. அதாவது 13.6% வாக்கு ஆதரவை பெறும் வாய்ப்பு தவெகவுக்கு உள்ளதாகவும் அந்த ஆய்வு மதிப்பிடுகிறது..
இதுவரை மாநில அளவில் மூன்றாவது வாக்கு வங்கியை தக்க வைத்திருந்த நாம் தமிழர் கட்சி 7.9% வாக்குகளுடன் அடுத்த நிலைக்கு, அதாவது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது..
மேற்கண்ட இந்த தரவுகள்தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.. இந்த புள்ளிவிவரங்களை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது.. தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு பெரிய கட்சிகளே மைய அரசியல் சக்திகளாக இருப்பது மறுக்க முடியாத உண்மை என்பதே அது..
அதிமுக, திமுக வாக்கு வங்கி
அதுமட்டுமல்ல, 41.5% மற்றும் 36.2% என்ற வாக்கு சதவீதங்கள் சேர்ந்து மாநில வாக்காளர்களில் பெரும்பான்மையான ஆதரவை இந்த 2 கட்சிகளே கட்டுப்படுத்துகின்றன என்பதையும் இந்த கணக்குகள் நமக்கு காட்டுகின்றன..
ஆனால் அதே சமயம் 13.6% என்ற தவெகவின் வாக்கு சதவீதத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.. இது அரசியலில் மிக சிறிய எண்ணிக்கையாகவும் கருதப்பட முடியாது.. ஒரு புதிய கட்சிக்கு இது ஒரு முக்கியமான ஆரம்ப அடையாளமாகவே பார்க்கப்படுகிறது..
சென்னையில் மாற்றம் விரும்பும் வாக்காளர்கள்?
இந்த மாற்றத்தின் மையமாக நகர்ப்புற பகுதிகள், குறிப்பாக சென்னை இருப்பதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.. எப்போதுமே தலைநகர் சென்னையை திமுகவின் கோட்டையாகவே அரசியல் வட்டாரங்கள் கருதி வந்துள்ளன.. ஆனால் சென்னையின் சில தொகுதிகளில் திமுகவிற்கு அடுத்தபடியாக தவெக 2வது இடத்தை பிடித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது என்பது கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது..
இதனால் நகர்ப்புற வாக்காளர்கள் புதிய அரசியல் தலைமையை எதிர்நோக்குகிறார்கள் என்பதற்கான ஒரு சிக்னலாகவும் இதை சிலர் பார்க்க தொடங்கியுள்ளனர்.. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் புதிய அரசியல் மாற்றங்களை ஏற்கும் மனப்பான்மை அதிகரித்து வருவதாகவும் அரசியல் பகுப்பாய்வாளர்கள் கணிக்கின்றனர்..
நகர்ப்புற வாக்காளர்கள்
சுருக்கமாக சொல்லப்போனால் பாரம்பரிய கட்சி அடையாளங்களை விட மாற்றத்தை ஆராய்ந்து பார்க்கும் மனநிலை நகர்ப்புற வாக்காளர்களிடம் அதிகமாக உருவாகி இருக்கலாம் என்பதே இந்த புள்ளிவிவரங்கள் காட்டும் யதார்த்தமாகும்..
இருந்தாலும் வாக்கு சதவீதம் மற்றும் தேர்தல் வெற்றி என்ற இரண்டு விஷயங்கள் தமிழ்நாட்டில் எப்போதும் ஒரே கோட்டில் நகர்வதில்லை என்பது கடந்த தேர்தல்கள் காட்டிய உண்மை.. மாநில அரசியல் வரலாற்றில் பல முறை 10% க்கும் அதிகமான வாக்கு ஆதரவு பெற்ற கட்சிகளுக்கே சட்டமன்ற இடங்கள் கிடைக்காமல் போன உதாரணங்கள் உள்ளன..
அதனால் இந்த 13.6% வாக்குகளை தொகுதி வெற்றிகளாக மாற்றுவதற்கு வலுவான கூட்டணி அரசியல், பரந்த அமைப்பு வலிமை மற்றும் நிலையான வாக்கு மாற்றம் போன்றவை அவசியமாகின்றன..
தேர்தல் வர இன்னும் சில நாட்கள் உள்ளன.. அதுவரை அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. ஆனாலும் தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்கள் தமிழக அரசியலில் ஒரு புதிய கணக்கை பற்றி பேச ஆரம்பித்து விட்டன என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
வேட்புமனு விஷயத்தில் பயங்கரமாக சொதப்பும் விஜய்.. எக்கச்சக்க பிழைகள்! நிராகரிக்க நிறைய வாய்ப்பு -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
தவெக தலைவர் விஜய் விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார்.. மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை! -
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
Vijay: புதுச்சேரியிலும் திருந்தாத ரசிகர்கள்! விஜய்யை பார்க்க சாலை விதிகளை மீறும் தவெகவினர்! -
தவெக வேட்பாளரின் மச்சான் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் பறிமுதல்.. வாக்காளர்களுக்காக பதுக்கலா? -
இன்னுமா என்னை யாருனு தெரியலை.. கோபியில் செங்கோட்டையன் பக்கா பிளான்.. எடப்பாடிக்கு செக் -
வேட்புமனுவை கரெக்டா நிரப்பி கொடுங்க.. தவெக வேட்பாளரை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரி! -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு












Click it and Unblock the Notifications