வாழ்க்கையில் வெற்றி பெற மாணவர்களுக்கு 5 விசயங்கள் ரொம்ப முக்கியம் - முனைவர் நெல்லை கவிநேசன்
வாழ்க்கையில் நிறைய சாய்ஸ் உள்ளது. பள்ளிப்படிப்பை முடித்து விட்டு உயர்கல்விக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் ஐந்து முக்கிய விசயங்களை தவறாது கடைபிடித்தால் வெற்றிகள் தேடி வரும் என்று முனைவர் சௌ.நாராயணராஜன் கூறியுள்ளார்.
சென்னை: கொரோனா வைரஸ் காலத்தில் மாணவர்களின் கல்வி முறையே மாறி விட்டது. பள்ளி, கல்லூரி படிப்புகள் எல்லாமே ஆன்லைனில்தான் என்றாகி விட்டதால் ஒருவித மனச்சோர்வுக்கு ஆளாகி விட்டனர். எதிர்காலத்தில் கல்வி முறை முழுவதுமே இப்படித்தான் இருக்குமோ என்ற கேள்விகள் மனதில் எழத்தொடங்கி விட்டது. பிளஸ் டூ மாணவர்கள் தேர்வுகள் எழுதாமலேயே உயர்கல்விக்கு தயாராகி விட்டனர். மேற்படிப்பை தேர்வு செய்யும் முன்பாக ஐந்து முக்கிய விசயங்களை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார் சிவந்தி ஆதித்தனார் கல்வி குழுமத்தின் செயலாளர் முனைவர் சௌ. நாராயணராஜன் என்கிற நெல்லை கவிநேசன்.
பள்ளிப்படிப்பை முடித்து விட்டு லட்சக்கணக்கான மாணவர்கள் மேற்படிப்பிற்காக கல்லூரி வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைக்கப் போகின்றனர். இந்த மாணவர்களுக்கு எந்த மாதிரியான அறிவுரைகளை சொல்ல விரும்புகிறீர்கள் என்றும் உயர்கல்வி துறையில் உள்ள வாய்ப்புகள் என்னென்ன? தற்போதைய சூழ்நிலையில் எந்த மாதிரியான துறையை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம் என்றும் அவரிடம் நம்முடைய கேள்விகளை முன்வைத்தோம்.

நிறைய பெற்றோர்களின் கேள்வியே பிள்ளைகளை என்ன படிக்க வைக்கலாம். என்ன படிக்க வைத்தால் எதிர்காலம் வளமாக இருக்கும் என்ற கேள்வி பல பெற்றோர்களின் மனதில் உள்ளது. பல மாணவர்களும் உயர்கல்வி பற்றிய கனவுகளில் இருக்கின்றனர். நம்முடைய கேள்விகளுக்கு விரிவாகவும் விளக்கமாகவும் பதில் அளித்துள்ளார் முனைவர் சௌ. நாராயணராஜன்.
கல்வி பற்றி பலருக்கும் பல வித எண்ணங்கள் இருக்கும். வங்கிப் பணிக்கு செல்லலாமா, அரசு வேலைக்கு செல்லலாமா, ஐஏஎஸ் அதிகாரியாக முயற்சி செய்யலாமா என்றும் பலரது மனதில் எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கும். உயர்கல்வித்துறையில் அடி எடுத்து வைக்கப் போகும் மாணவர்கள் ஐந்து முக்கிய விசயங்களை தவறாது கடைபிடிக்க வேண்டும்.

நம்முடைய இலக்கு என்ன? என்னவாகப்போகிறோம் என்ற குறிக்கோளை முடிவு செய்ய வேண்டும். நம்மால் முடியுமா என்று யோசிக்க வேண்டும். எங்கு போக வேண்டும் என்று முடிவு செய்த பின்னர்தான் என்ன வழியில் எப்படி போக வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.
நம்முடைய இலக்கை நிர்ணயம் செய்த பின்னர் அதை படிப்பது பற்றிய ஆர்வம் இருக்க வேண்டும். பெற்றோர்களின் விருப்பத்தை கண்டிப்பாக கேட்க வேண்டும். படித்த பெற்றோர்களோ, படிக்காத பெற்றோர்களோ அவர்களின் அனுபவத்தை கேட்க வேண்டும்.
குடும்பத்தின் நிதி நிலைமை தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய வசதி எப்படி படிப்பிற்காக நம்மால் செலவு செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டும். காரணம் கொரோனா காலத்தில் பலரது குடும்பத்தின் பொருளாதார நிலைமை சிக்கலாகவே உள்ளது. மதிப்பெண்கள் எப்படி என்று பார்க்க வேண்டும். நம்முடைய படிப்பை பற்றிய அறிவும் திறமையும் இருக்க வேண்டும்.

கல்லூரிகள், கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்வதில் சரியான தெளிவு இருக்க வேண்டும். கல்லூரி நிர்வாகங்களைப் பற்றியும் அவர்களின் பின்னணியைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். கட்டமைப்பு எப்படி உள்ளது. அந்தக் கல்லூரியில் படித்தால் வேலை கிடைக்குமா? மாணவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? பேராசிரியர்கள் பாடம் நடத்துவது எப்படி, தரச்சான்று பெற்ற கல்லூரியா என்பதை எல்லாம் பெற்றோர்களும் மாணவர்களும் ஆய்வு செய்வது அவசியம்.

முக்கியமாக அந்தக் கல்லூரி நகரத்தின் முக்கிய பகுதிகளில் உள்ளதா என்றும் பார்க்க வேண்டியது அவசியம். அப்ளிகேசன் வாங்கும் போதே கல்லூரியை சுற்றிப்பார்த்து ஹாஸ்டல் வசதி போன்றவைகளை தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரியில் சேர்ந்த பின்னர் அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்வதை விட முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம்.
சரியான திட்டமிடல் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். நல்ல கல்லூரியை தேர்வு செய்து படித்தால் மட்டுமே எதிர்காலத்தில் வெற்றி பெற முடியும். கல்லூரி சென்று படித்தாலும் பிள்ளைகளை பெற்றோர்கள் கண்காணிப்பது அவசியம் என்றும் முனைவர் முனைவர் சௌ. நாராயணராஜன் கூறியுள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications