8% ஓட்டு வைச்சிருக்கவங்க தலைமை தாங்குறதா? திமுகவை கேட்ட மாணிக்கம் தாகூர்.. டாட்டா காட்டுதா காங்கிரஸ்
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பான விவாதங்கள் மற்றும் மல்லுக்கட்டு பிரச்சினைகள் பல்வேறு ஓரங்களில் மேலெழுந்து வருகின்றன.. அதிலும், கூட்டணியில் பங்கீடு, அதிகாரப் பகிர்வு, மற்றும் உட்கட்சி சண்டைகள் தலைமை பிரச்சினையாகவே மாறி நிற்கின்றன.. திமுக கூட்டணிக்குள் காங்கிரஸ் வருமா? வராதா? என்ற கேள்விதான் இதன்மூலம் பலருக்கும் எழுந்துள்ளது.
தமிழக அரசியல் களத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த விவாதங்கள் தற்பொழுது சூடுபிடிக்க தொடங்கிவிட்டதால் எப்படியும் பூசல்கள் முடிவுக்கு வந்துவிடும் என்று கணிக்கப்பட்டது..

ஆனால், 2 கட்சிகளுக்கும் இடையே இடங்களை ஒதுக்குவதில் நிலவும் இழுபறி மற்றும் கருத்து வேறுபாடுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
காங்கிரஸ் திமுக கூட்டணி
கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை திமுக தரப்பில் சில தயக்கங்கள் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கினால் அது திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி உயர்த்தி வருவதாக கூறப்படுகிறது..
கடந்த கால அனுபவங்களை சுட்டிக்காட்டும் திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அதனால் உதயசூரியன் சின்னத்தில் அதிக இடங்களில் போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்றும் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்..
உதயசூரியன் சின்னம்
மற்றொருபுறம், காங்கிரஸ் தலைவர்களுக்குள்ளும் இந்த கூட்டணி விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை... சில தலைவர்கள் திமுக கொடுக்கும் இடங்களை ஏற்றுக்கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்று சொன்னாலும், மற்றவர்கள் கட்சியின் கவுரவத்தை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமைக்குள்ளேயே இந்த விவகாரத்தில் கடும் போட்டி மற்றும் கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. இடங்களை குறைத்து வாங்கினால் அது கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என ஒரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.
இந்த குழப்பங்களுக்கு இடையே திமுக எம்பி கனிமொழி தொகுதி பங்கீடு குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருந்ததுடன், விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்..
கூட்டணிக்குள் எந்த விரிசலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தாலும் கள நிலவரம் சவாலாகவே உள்ளது.
மாணிக்கம் தாகூர்
இப்படிப்பட்ட சூழலில்தான், புதுச்சேரி அரசியல் மற்றும் கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது கண்டனத்தை மீண்டும் பதிவு செய்துள்ளார். 8% ஓட்டு வைத்துள்ள திமுக எப்படி தலைமையேற்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்..
"கூட்டணியில் 8% ஒட்டு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா? இல்ல 26% உள்ள கட்சி தலைமை தாங்குமா? ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இழிவாக பேச வேண்டும்? தொடரும் இந்த முறை நல்லது இல்ல" என்று பதிவிட்டுள்ளோர்...
8% 26% வாக்கு சதவீதம்
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார்... குறிப்பாக புதுச்சேரி அரசியலில் நடக்கும் மாற்றங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அணுகுமுறை காங்கிரசை ஓரங்கட்டும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டியிருப்பது பலரது கவனத்தை பெற்று வருகிறது..
இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான மரியாதை மற்றும் முக்கியத்துவம் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய மாணிக் தாகூர் இது போன்ற செயல்பாடுகள் கூட்டணியின் ஒற்றுமையை சிதைக்கும் என்று இன்றைய தினம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில் மாணிக்கம் தாகூரின் இந்த அதிருப்தி அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எப்போது கூட்டணி?
இதற்கெல்லாம் காரணம், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே 2 கருத்து பிரிவுகள் உள்ளன.. ஒரு பகுதி திமுக - காங்கிரஸ் பாரம்பரிய கூட்டணியை தொடர வேண்டும் என வலியுறுத்துகிறது, மற்ற பகுதி வேறு கூட்டணிகளை ஆராய வேண்டும், கூடுதல் தொகுதிகள் மற்றும் அதிகாரப் பங்கீடு குறித்து சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறது..
காங்கிரஸ் கட்சியின் இந்த நிலை குழப்பமானதாக உள்ளது, இறுதி முடிவு இதனாலேயே இன்னும் எடுக்கப்படவில்லை, கூட்டணி இருக்கிறது, ஆனால் முழுமையாக உறுதியானதாக சொல்ல முடியாததாக உள்ளது, தொண்டர்களை ஒருவித சோர்வுக்குள்ளாக்கி வருகிறதாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்!












Click it and Unblock the Notifications