அயனாவரம் ஸ்டோர் ரூமில் அதிகாலையில் எரிந்த பல்பு.. தர்மபுரி காவலருக்கு இப்படியா ஆகணும்
சென்னை: தர்மபுரியைச் சேர்ந்தவர் விஜய் என்பவர் சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படையில் காவலராக வேலை செய்து வந்தார். அயனாவரம் புது தெருவில் உள்ள ஒரு வீட்டின் 2-வது மாடியில் தன்னுடன் தன்னுடன் வேலை செய்யும் 2 போலீஸ்காரர்களுடன் தங்கி இருந்தார். நேற்று காலை ஒரே அறையில் தங்கி இருக்கும் தினேஷ் என்ற போலீஸ்காரர் கண்ட காட்சி ஆடிப்போக வைத்துள்ளது.
காவலர்கள் மன அழுத்தத்தில் தவறான முடிவெப்பது அதிகமாகி வருகிறது. வேலை, மனஅழுத்தம், குடும்ப பிரச்சனை காரணமாக அப்படி தவறான முடிவெடுக்கிறார்கள்.தர்மபுரியைச் சேர்ந்த காவலர் தவறான முடிவெடுத்துள்ளார்.

தர்மபுரியைச் சேர்ந்த 27 வயதாகும் விஜய் என்பவர் சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படையில் போலீசாக வேலை செய்து வந்தார். அயனாவரம் புது தெருவில் உள்ள ஒரு வீட்டின் 2-வது மாடியில் தன்னுடன் வேலை செய்யும் 2 காவலர்களுடன் தங்கி இருந்தார்.
நேற்று காலை 5 மணி அளவில் இவருடன் ஒரே அறையில் தங்கி இருக்கும் தினேஷ் என்ற காவலர், பணிக்கு செல்வதற்காக எழுந்து கதவை திறக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது கதவு வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ் வீட்டின் உரிமையாளர் வசந்தாவுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். வசந்தா மாடிக்கு வந்து கதவை திறந்து விட்டு வந்துருக்கிறார்.
அப்போது அங்குள்ள ஸ்டோர் ரூமில் வழக்கத்துக்கு மாறாக மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது.இதைக் கண்டு சந்தேகத்தின்பேரில் தினேஷ் அங்கு சென்று பார்த்தார். அப்போது அந்த அறைக்குள் போலீஸ்காரர் விஜய், தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு காவலர் தினேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த உடனே அயனாவரம் போலீசாருக்கு தினேஷ் தகவல் தெரிவித்தார். இந்த புகாரின்பேரில் அயனாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கிய விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை
-
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications