Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏமாற்றியே பழகிய ’சூப்பர் ஸ்டார்’ ரஜினி! ஏமாந்தே பழகிய ரசிகர்கள்! இப்படி போஸ்டர் ஒட்டி இருக்காங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : 'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்' என்பது வெறும் பாடல் வரிகள் மட்டுமல்ல தமிழக வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்ட ஒன்று. தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கு என அதிரடி காட்டிய அவர் இனி அரசியலே இல்லை என எண்ட் கார்டு போட்டாலும் ரசிகர்கள் அவரை இன்றளவும் அரசியலுக்கு அழைத்து வருகின்றனர்.

சிவாஜி ராவ் கொய்க்வாட் என சாதாரண கூலி தொழிலாளியாக இருந்த அவர் ரஜினிகாந்தாக மாறி உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் என்றால் அவரது உழைப்பு அபரிமிதமானது.

இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழையை பொழிந்து கொண்டிருக்கின்றனர். மறுபுறம் தீச்சட்டி ஏந்தாத குறையாக அவர் வீட்டு வாசலில் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

சிறு சிறு வேடங்கள், வில்லன், துணை நாயகன், நாயகன், சூப்பர் ஸ்டார் என சினிமா துறையில் அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதல்ல, புறக்கணிப்புகள், உருவ கேலி, நிறம், வசன உச்சரிப்பு என தனக்கு எதிராக என்னென்ன அஸ்திரங்கள் தொடுக்கப்பட்டதோ அதை அப்படியே தனது ஆயுதங்களாக மாற்றிக் கொண்டார், இன்றளவும் தமிழ் சினிமாவின் முன்னணி வசூல் நாயகன் என்றால் அது ரஜினிகாந்த் தான். அவர் படங்களுக்கு அவர் படங்களே போட்டி. அவரது வசூல் சாதனைகளுக்கு அவரது வசூல் சாதனைகளே போட்டி.

ரஜினிகாந்த் அரசியல்

ரஜினிகாந்த் அரசியல்

எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரஜினிகாந்த் அரசியல் என வரும்போது மட்டும் சறுக்கி விடுகிறார். 1996 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ரஜினிகாந்தின் அரசியல் சொதப்பல்களால் அவரது ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 1991 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ரஜினிகாந்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. 1992 ஆம் ஆண்டு அண்ணாமலை பட போஸ்டர்களுக்கு ஜெயலலிதா அரசு தடை விதிக்கப்பட்டதாகவும் அதனால் அப்படத்தில் அவருக்கு எதிராக வசனங்கள் இருந்ததாக கூறப்பட்டது.

ஜெயலலிதாவுடன் மோதல்

ஜெயலலிதாவுடன் மோதல்

1995ஆம் ஆண்டு பாட்ஷா பட வெற்றி விழாவில் ரஜினிகாந்த் தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவத் தொடங்கியது எனக் கூற அதில் கலந்து கொண்ட ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பதவியை இழக்க வேண்டி இருந்தது. இதையடுத்து 1996 ஆம் ஆண்டு தேர்தலில் இனி அதிமுக ஆட்சி வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என வாய்ஸ் கொடுத்தார் ரஜினி. அது அதிமுகவுக்கு மிகப்பெரிய அளவில் தோல்வியை தந்தது. இதனால் ரஜினியின் அரசியல் செல்வாக்கு அதிகரித்தது.

அதிரடி கருத்துகள்

அதிரடி கருத்துகள்

அதற்குப் பிறகாக நடிகர் சங்க ஆர்ப்பாட்டத்தில் 'நம்மிடத்தில் தண்ணீர் எடுக்க அவங்க தடுத்தாங்கன்னா அவர்களை உதைக்க வேண்டாமா' என ரஜினி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2009 ஆம் ஆண்டு ஈழப் படுகொலை போராட்டம், 2011 தேர்தலில் அதிமுகவுக்கு ரஜினி ஓட்டு போட்டார் என்ற செய்தி. 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் நான் அரசியலுக்கு வருவது உறுதி. 2020இல் அரசியலுக்கு வருவேன். ஆனால் முதல்வராக இருக்க மாட்டேன் என்றது, நவம்பரில் ரசிகர்களுடன் ஆலோசனை அதற்குப் பிறகு கட்சி தொடங்க முடியவில்லை என்னை மன்னியுங்கள் என ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டது என அவரது அரசியல் பயணம் மிக நீண்டது.

பிறந்தநாள்

பிறந்தநாள்

ஒவ்வொரு ஆண்டும் திரைப்படம் வரும்போது மட்டும் ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சுக்கள் எழுவதும் அதன் பின்னர் அது அடங்கிப் போவதும் ரஜினி ரசிகர்களுக்கு ஒன்றும் புதிதல்ல திரைப்படத்தில் வருவது போல 'அவர்கள் ஏமாற்றி பழகிட்டாங்க.. நாங்க ஏமாந்து பழகிட்டோம்' என தற்போது .ரசிகர்கள் பலரும் புலம்பினாலும் பலரும் அரசியல் ஆதாயம் தேடி மாற்றுக் கட்சிகளுக்கு சென்று விட்டனர் ஆனால் பெரும்பாலானோர் இன்னும் ரஜினி ரசிகர்களாகவே தொடர்கின்றனர் தமிழகம் முழுவதும் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர்கள் அன்னதானங்கள் நலத்திட்ட உதவிகள் என களைக்கட்டி வருகிறது.

கலக்கும் போஸ்டர்கள்

கலக்கும் போஸ்டர்கள்

தற்போது மதுரையில் ரஜினியை குழந்தையாக பாவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தான் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளுவராகவும் குழந்தையாகவும் ரஜினியை பாவித்து ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்க அவர் ஊரிலேயே இல்லை வீட்டுக்கு வர வேண்டாம் என ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறார் லதா ரஜினிகாந்த். இருந்தும் இன்னும் அவர் வீட்டு வாசலில் அரசியலுக்கு வருவாரா என காத்திருந்ததைப் போல முகம் காட்டுவாரா எனவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+