"அது" பாட்டுக்கு நடக்குது.. இவங்க பாட்டுக்கு செஸ் ஆடிக்கிட்டே, என்ன மாடலோ: திமுகவை சீண்டும் கஸ்தூரி
நடிகை கஸ்தூரி திமுக அரசை கண்டித்தும், விமர்சித்தும் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: " 'நீட்' தேர்வு அது பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறது.. இவர்கள் பாட்டுக்கு 'செஸ்' ஆடிக்கிட்டே, அடுத்த மரணத்தில் அரசியல் செய்ய போயாச்சு; என்ன மாடலோ?" என்று நடிகை கஸ்தூரி திமுக அரசை விமர்சித்துள்ளார்.
சென்னை மாமல்லபுரத்தில் வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க போகிறார்கள்.. இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

டைரக்டர் விக்னஷ்
துவக்க விழாவை பிரம்மாண்ட முறையில் சென்னையில் இருக்கும் நேரு விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது... இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் தொடர்பான பாடல் வீடியோ ஒன்று வெளியானது.. நடிகர் ரஜினிகாந்த இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.. டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கி, ஏஆர். ரஹ்மான் இசை அமைத்து இருந்தார்... அதில், முதல்வர் ஸ்டாலின் கும்பிட்டவாறு நடந்து வருவது போன்றும், சுற்றியும் பெண்கள் நின்று நடனம் ஆடுவதும் போலவும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

சேம்பியன் போட்டோ
ரஹ்மானும் அந்த வீடியோவில் தோன்றுகிறார்... இத்தனை நாளும், ஒலிம்பியாட் விழா ஏற்பாடுகள் நடந்து வந்தநிலையில், அமைதி காத்து வந்த பாஜக, முதல்வர் ஸ்டாலின் ஒலிம்பிக் தொடர்பான பாடல் வீடியோவில் தோன்றியதுமே, பிரச்சனையை எழுப்ப ஆரம்பித்துவிட்டது. இந்த வீடியோவில், தேசியக் கொடி இடம் பெறவில்லை, உலக செஸ் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பெயர் இடம் பெறவில்லை, பிரக்ஞானந்தாவின் போட்டோவும் இடம் பெறவில்லை, என்று கேள்விகள் எழுந்து வருகின்றன..

நடிகை கஸ்தூரி
இந்த செஸ் விளையாட்டை வைத்து, விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.. தற்போதைய திமுக அரசு, பிடிவாதமாக உள்ளது நீட்தேர்வு மற்றும் மாடல் விஷயங்களில்தான்.. அந்த வகையில், இவைகளை சுட்டிக்காட்டி நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.. கஸ்தூரியை பொறுத்தவரை, சமூக அக்கறை நிறைந்தவர்.. மிகவும் துணிச்சலானவர்.. யாருக்கும் பயப்படாமல், தன்மீதான விமர்சனங்களை தைரியமாக எதிர்கொள்பவர்.. அந்த வகையில், திமுக தரப்பையும் அவ்வப்போது கேள்வி கேட்டு வருகிறார்.

செஸ் ஆடிக்கிட்டே
இப்போது ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "நீட் தேர்வு வராது. வரவிட மாட்டோம்" என சொல்லியே அன்று அனிதா உடைய உயிரை வாங்கியவர்கள் அதே வாக்குறுதியை சொல்லி ஓட்டும் வாங்கினர்., இப்போது 'நீட்' தேர்வு அது பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறது.. இவர்கள் பாட்டுக்கு 'செஸ்' ஆடிக்கிட்டே, அடுத்த மரணத்தில் அரசியல் செய்ய போயாச்சு; என்ன மாடலோ?" என்று கருத்து பதிவிட்டுள்ளார்.. அதேபோல இன்னொரு ட்வீட்டில், "ராம்நாத் கோவிந்த், திரௌபதி முர்மு , மோடி, அமித் ஷா எல்லாரும் ப்ராஹ்மின்ஸ் தானே... சொந்த மதத்தை மறைச்சு இந்து பேருல ஒளிஞ்சு அரசியல் பண்ணுற க்ரூப்பு. வீட்டுல பூஜை பண்ணிட்டு வெளியே வீம்பா வீடியோ வுடுற கும்பல். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்றும் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சத்யராஜ், கமல்
இதையடுத்து, கஸ்தூரியின் இந்த ட்வீட்டுக்கு ஆதரவும், எதிர்ப்புமாய் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.. 'கமல், சூர்யா, சத்யராஜ் போன்றோர் தற்போது மாணவி விவகாரத்தில் எங்கே போயினர்? காணவில்லையே என்று விளம்பரம் தரலாமா மக்களே என்று கிண்டலாக கேட்டு வருகின்றனர்.. மேலும் சிலர், "நீட்ட ரத்து பண்ண வேண்டிய அதிகாரம் ஒன்றிய அரசுக்கிட்ட இருக்கு... மாநில அரசு எவ்வளவு சட்ட போராட்டம் நடத்தியும் ஒன்றிய அரசு முட்டுக்கட்டையா இருக்கு.. உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தா ஒன்றிய அரசை கேள்வி கேக்கணும்' என்று கஸ்தூரிக்கு பதிலடி தந்து வருகின்றனர்.
-
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து! -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே












Click it and Unblock the Notifications