அரை இன்ச் கூட நகராத கூட்டணி.. அடம் பிடிக்கும் பாஜக! தொகுதி லிஸ்டை பார்த்ததும் பதற்றமான எடப்பாடி!
சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என பாஜக கூறியுள்ளதாகவும், அதுவும் பழனி, காஞ்சிபுரம், திருத்தணி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில் நகரங்கள் இருக்கும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிமுக தரப்பு 25 இடங்களை மட்டுமே கொடுக்க முடியும் எனத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோல, தேமுதிகவும் அதிக இடங்களை எதிர்பார்ப்பதால், அடுத்த கட்டத்துக்கு கூட்டணியை நகர்த்த முடியாமல் அதிருப்தியில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கின்றனர் அதிமுகவினர்.
எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாஜக கூட்டணியைச் சுற்றி பல்வேறு குழப்பங்களும், அதிருப்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இப்போதே தொகுதி பங்கீடு, கூட்டணி வியூகம், முதல்வர் வேட்பாளர் விவகாரம் என அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள உள்கட்ட சிக்கல்கள் தற்போது வெளிப்படையாக பேசப்பட தொடங்கியுள்ளன. அதிமுக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களின்படி, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தரப்பு 60 தொகுதிகளை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக பாஜக
அதிலும் பழனி, காஞ்சிபுரம், திருத்தணி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட முக்கிய கோவில் நகரங்கள் அடங்கிய தொகுதிகளின் பட்டியலை பாஜக தரப்பு முன்வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கோரிக்கை அதிமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு பதிலாக அதிமுக தரப்பு அதிகபட்சமாக 25 தொகுதிகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க முடியும் என பேரத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக மட்டுமல்லாமல் தேமுதிகவும் அதிக இடங்களை எதிர்பார்த்து வருவதால், கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் தடைபட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக தரப்பில் இருந்து "6 சீட்டுகள்" என்ற பேச்சே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், பிரேமலதா விஜயகாந்த் இதில் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கூட்டணியை விரிவுபடுத்த எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில், திடீரென மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணியாக செயல்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தது தமிழக அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிரேமலதா விஜயகாந்த்
அதுவரை பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்த அதிமுக, ஒரே நாளில் கூட்டணி அரசியலுக்கு மாறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த கூட்டணியில் இன்னும் பல நிச்சயமின்மைகள் நீடிப்பதாக அதிமுக தொண்டர்களும், மூத்த தலைவர்களும் கருதுகின்றனர். குறிப்பாக, அமித் ஷா தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என பேசிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று ஒருமுறையாவது வெளிப்படையாக கூறாதது அதிமுக தரப்பில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல்
இந்த பின்னணியில், கடந்த டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றும், தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் என்றும் தெளிவாக அறிவிக்கப்பட்டது. தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜக கூட தமிழ்நாட்டில் அதிமுக தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
திமுக ஆட்சி
மேலும், திமுக ஆட்சியை அகற்றுவதே இந்த கூட்டணியின் முக்கிய இலக்கு என்றும், அதே நோக்கத்துடன் இருக்கும் பிற கட்சிகளும் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. கூட்டணியில் சேரும் கட்சிகள் அனைத்தும் அதிமுக தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் வழங்க வேண்டும் என்பது முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தில் இருக்கும் என்றும் பொதுக்குழு தீர்மானம் வலியுறுத்தியது.
எடப்பாடி பழனிசாமி
ஆனால் பொதுக்குழுவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்த பல விஷயங்கள் நடக்கவில்லை என்பதால், அவரே தற்போது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள சம்மதம் தெரிவித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தவெக தரப்புக்கு தாவத் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருபுறம் பாஜக அதிக தொகுதிகளை கேட்கிறது, மறுபுறம் தேமுதிக அதிருப்தியில் இருக்கிறது. இதனால், அதிமுக கூட்டணியை பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிகள் அனைத்தும் கிணற்றில் போட்ட கல்லாக மாறிவிட்டதாக அதிமுகவினர் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
-
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
என்னது திமுகவுக்கு வாழ்த்தா? பெரம்பலூர் நாம் தமிழர் வேட்பாளரை மாற்றிய சீமான்.. என்ன நடந்தது? -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
இவங்க ஜெயிச்சா அவங்கதான் CM.. வேடசந்தூர் டூ ராமநாதபுரம்! இந்த 4 இடத்தை மட்டும் கவனிங்க! ஏன் தெரியுமா -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்?












Click it and Unblock the Notifications