அதிமுக சதுரங்கம்! எடப்பாடி வைத்த “செக்”..! வெலவெலத்துப் போன ஓபிஎஸ்! முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு?
சென்னை : எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஒற்றை தலைமை விவகாரத்தில் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், சொந்த கட்சியினராலேயே தற்போது கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் முன் இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு என்ன என்பது குறித்து பார்க்கலாம்..
ஜூன் 23ஆம் தேதி அதிமுக தொண்டர்கள் யாரும் இந்த நாளை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது என்பதுபோல பரபரப்புகள் விறுவிறுப்புகளுக்கு பஞ்சமில்லாமல் 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த அரசியல் நாடகம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவடைந்துள்ளது.
ஒற்றைத் தலைமை கோரிக்கை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வத்திற்குள் எழுந்த மோதல், அதிரடி பேட்டிகள், அறிக்கைகள், பேச்சுவார்த்தைகள், காவல்துறை, நீதிமன்ற வாதங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு பொதுக்குழு கூட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தது.

அதிமுக பொதுக்குழு
சுமார் 2,600 பேர் கலந்து கொண்டு இருந்த அதிமுக பொதுக்குழுவில் முன்னெப்போதும் சந்தித்திராத பலத்த அவமானங்களையும் எதிர்ப்புகளையும் ஒருசேர சந்தித்தார் பன்னீர்செல்வம். ஜெயலலிதா காலத்தில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திய பன்னீர்செல்வத்தை தொண்டர்களில் வெளியே போ! ஓபிஎஸ் ஒழிக என முழக்கமிட்டதோடு அவர் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி துரத்தினர்.

ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி
இதனால் அதிமுக பொதுக்குழு கூட்டமே கலவர காடாக காட்சியளித்தது. இதையடுத்து கவிழ்ந்த தலையோடு பொதுக் குழுவில் இருந்து வெளியேறினார் ஓபிஎஸ். இந்நிலையில் நேற்று தனது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் டெல்லி புறப்பட்டுச் சென்றார் பன்னீர்செல்வம். பாஜகவில் தனக்கு ஆதரவாக இருக்கும் மூத்த அமைச்சர்கள் மூலம் பிரதமர் மோடியை சந்தித்து இது குறித்து விவாதிப்பார் என கூறப்பட்டாலும் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சிக்காக வைத்து இருக்கிறார் என கூறப்படுகிறது.
Recommended Video

தேர்தல் ஆணையத்தில் புகார்
ஆனால் முன்னர் கூறிய காரணத்திற்காகத் தான் இந்த அவசர டெல்லி பயணம் என்று கூறுகின்றார் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். மேலும் இந்த டெல்லி பயணத்தின்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அடுத்த காய் நகர்த்தலை தொடங்கியுள்ளார் பன்னீர்செல்வம். அதாவது அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமானது எனவும், விதிகளுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளார் ஓ பன்னீர்செல்வம் . மேலும் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமித்தது விதிகளுக்குப் புறம்பானது எனவும் பொதுக்குழு தேதி அறிவித்தது செல்லாது என அடுக்கடுக்கான புகார்களை கொடுத்துள்ளார் ஓபிஎஸ். அதன் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை தற்போது எடப்பாடி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சரிந்த ஆதரவு
பொதுக்குழு கூட்டம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இது நேற்றைய பொதுக் குழுக் கூட்டத்திலேயே வெளிப்படையாக தெரிந்தது. கட்சியில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அவருக்கு ஆதரவாக திரும்பியுள்ள நிலையில் தற்போது தேனி உள்ளிட்ட சில மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஓபிஎஸ் அணியில் உள்ளனர். இதனை வைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் நெருக்கடி கொடுக்கலாமே தவிர முழுமையாக அவரைப் பணியவைக்க முடியாது என்பது அனைவருக்குமே தெரியும்.

ஒரே ஒரு வாய்ப்பு
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் உத்தரவுக்காக இரு தரப்புமே காத்திருக்கின்றனர். ஆனால் ஓ. பன்னீர்செல்வம் முன்பு ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்பது என கூறுகின்றனர் அதிமுக மூத்த நிர்வாகிகள். நேற்று பொதுக் குழுவில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய போது கூட தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் தான் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. ஏன் தேனி திருச்சி உள்ளிட்ட ன்னீர்செல்வம் ஆதரவு மாவட்டங்களில் கூட பெரிய அளவிலான போராட்டங்கள் எதுவும் இல்லை. இதனால் எடப்பாடியின் கையே ஓங்கி இருப்பதை அவர் உணர்ந்துள்ளதோடு அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர்












Click it and Unblock the Notifications