’எதிர்கட்சி தலைவர்’.. 'மேலிடத்துக்கு’ போனை போட்ட ஓபிஎஸ்! விடாப்பிடி எடப்பாடி.. கைகொடுக்குமா ‘தாமரை’?
சென்னை : அதிமுகவில் என்னதான் ஓபிஎஸ்-க்கு ஆதரவு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியின் காரணமாகவே அவருக்கு ஆதரவு கூடி இருப்பதால் அதனை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தீவிரம் காட்டி வரும் நிலையில் இதற்காக டெல்லி மேலிடத்தின் ஆதரவையும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் தங்கள் தரப்பை ஒன்றுமே செய்ய முடியாது என்கின்றனர் எடப்பாடி தரப்பினர்.
'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்பது போல தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே என்று வெற்றி பெற்ற ஆட்சியை பிடித்த கட்சி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சி என பல்வேறு சாதனைகளை படைத்த அதிமுக தற்போது பரிதாபமான நிலையில் இருக்கிறது.
ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோருக்கு இடையேயான அதிகார மோதல் காரணமாக சட்டமன்றத்திலும் சரி பொது வெளியிலும் சரி நேரடியாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய முடியாத நிலை இருப்பதாக தொண்டர்கள் புலம்புகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தங்கள் தரப்புக்கு பெருமளவில் ஆதரவு இல்லை என்றாலும் அதனை எப்படியாவது நிறைவேற்றி காட்ட வேண்டும் என ஓபிஎஸ் சிறப்பு தீவிரம் காட்டி வருகிறது. ஆரம்பத்தில் ஓபிஎஸ் உடன் இருந்த மாவட்ட செயலாளர்கள் தற்போது வரை இருக்கின்றனர். கூடுதலாக ஒன்றிரண்டு ஒன்றிய செயலாளர்கள் மட்டுமே தற்போது வந்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம் என்ன ஏன் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பெரிய அளவிலான நிர்வாகிகள் ஆதரவு தங்களுக்கு கிடைக்கவில்லை என விசாரித்த போது எடப்பாடி பழனிச்சாமி கையில் வைத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி தான் காரணம் என தெரிய வந்திருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர்
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலியிருந்தாலும், தமிழக அரசியலைப் பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைவர் என்பது தான் எதிர்க்கட்சிகளுக்கிடைய இருக்கும் முக்கிய அங்கீகாரம். அது எடப்பாடி பழனிச்சாமி இடம் இருப்பதாலேயே பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும். இதனாலேயே அவர் தரப்பிலேயே தொடர எம்எல்ஏக்களும் மாவட்ட செயலாளர்களும் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தொடர்கிறது. இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் சசிகலாவுடன் இணைந்து பல எம்எல்ஏக்களை தங்கள் தரப்புக்கு இழுக்க இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன. இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் தலைவர் பதவியை கைப்பற்றினால் அதிமுக முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என கருதுகிறது ஓபிஎஸ் தரப்பு.

டெல்லி மேலிடம்
இதற்காக பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிமுகவில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்றால் 'டெல்லி மேலிடத்தின்' ஆதரவு தேவை என்பதை நன்கு உணர்ந்துள்ள ஓபிஎஸ் தரப்பு அதை நோக்கி அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது. தற்போதைய சூழலில் ஓபிஎஸ்க்குத் தான் டெல்லி மேலிடத்தின் ஆதரவு இருப்பதாக கருதப்படும் நிலையில் எம்எல்ஏ கல்வி விவகாரத்தில் அந்த ஆதரவு கை கொடுக்குமா என்பது கேள்விக்குறி?. அதே நேரத்தில் என்ன செய்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒன்றும் செய்ய முடியாது என்கின்ற எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தரப்பினர்.

நடக்குமா? நடக்காதா?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 75 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் அதிமுக மட்டும் 63 இடங்களை கைப்பற்றியது. தென்மாவட்டங்கள் தவிர்த்து கொங்கு மண்டலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 48 தொகுதிகளை அதிமுக வென்றது. குறிப்பாக கோவை சேலம் தர்மபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இருப்பது முழுக்க முழுக்க எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எனக் கூறப்படும் நிலையில் அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவ்வளவு எளிதாக யாரும் பெற்று விட முடியாது எனக் கூறும் அரசியல் நோக்கர்கள் ஒருவேளை பாஜக ஆதரவு இருந்தால் இது சாத்தியம் என்கின்றனர் அது நடக்குமா நடக்காதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications