முகத் திரையை கிழிக்கனும்.. எடப்பாடி தான் ஒற்றைத் தலைமை! திரண்டு வந்த பாசறை.. “அவரே” சொல்லிட்டாரே..!
சென்னை : திமுகவின் முகத்திரையை கிழிக்க எடப்பாடி பழனிச்சாமி அவர்களே அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் எனவும், தங்கள் ஆதரவு முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் என அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.பி.பரமசிவம் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், இரட்டைத் தலைமை தான் தொடர வேண்டும் என்பதில் ஒ.பன்னீர்செல்வம் தரப்பும் உறுதியுடன் உள்ளனர்.
இந்நிலையில் ஒற்றைத் தலைமையா? இரட்டை தலைமையா? என்பது குறித்து பொதுக்குழுவே முடிவு செய்யும் என்றே நிர்வாகிகள் கூறினார், பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதால் தற்போதைய சூழலில் அவர் பக்கமே காற்று வீசுகிறது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை பெரும்பான்மையானோர் விரும்புகின்றனர்; பெரும்பாலானோர் விரும்புவதால் ஒற்றைத் தலைமையை எல்லாருமே ஏற்றுக்கொள்வார்கள் என எடப்பாடி தரப்பு கூறினாலும், ஜல்லிக்கட்டுக் காளை போல முறுக்கிக் கொண்டு நிற்கும் ஓபிஎஸ் தரப்பு என்ன நடந்தாலும் இந்த முறை விட்டுத் தரப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு தரப்பு அதிர்ச்சி வைத்தியம் தர தக்க சமயம் பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

7வது நாளாக ஆலோசனை
இந்நிலையில் 7வது நாளாக இன்றும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதன்படி ஒ.பன்னீர்செல்வம் உடனான ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், தர்மர் ஆகியோரும், எடப்பாடி உடனான ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.

எடப்பாடிக்கு ஆதரவு
இதற்கிடையே இவ்வளவு நாள், ஓபிஎஸ் இபிஎஸ் என எந்தத் தரப்புக்கும் நேரடியாக ஆதரவு தெரிவிக்காமல் அமைதி காத்துவந்த அதிமுகவின் சார்பு அணி நிர்வாகிகள் பலரும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பக்கம் திரும்பியுள்ளனர். நேற்று எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், அடுத்ததாக அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒட்டுமொத்தமாக தங்களது ஆதரவை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அளித்துள்ளது.

இளைஞர், இளம்பெண்கள் பாசறை
எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.பி.பரமசிவம், இளம் பெண்கள் இளைஞர் பாசறை மாநில நிர்வாகிகள் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் என அனைவரும் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் திராவிட மாடல் உள்ளிட்ட பல்வேறு பொய்களைக் கூறி தமிழக மக்களை ஏமாற்றிவரும் திமுகவின் முகத்திரையை கிழிக்க ஒற்றை தலைமை மிகவும் அவசியம் எனவும். ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதற்கு தங்கள் இளைஞர் இளம்பெண்கள் பாசறை முழு ஆதரவு அளிக்கும் என்றார்.
Recommended Video

விபிபி பரமசிவம்
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரமசிவம், அடுத்து நடைபெற்ற தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இருந்தும் அவரது சிறப்பான செயல்பாடுகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக அவர் செய்த சாதனைகளை கருத்தில் கொண்டே தோல்வியடைந்திருந்தாலும் அவருக்கு கழகத்தின் இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொறுப்பை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது முதல் எடப்பாடி ஆதரவாளராகவே இருந்த அவரது அணியில் இருந்த பரமசிவம், தற்போது அவருக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம் -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?











Click it and Unblock the Notifications