முதல்வர் ஸ்டாலினுக்கு ஃபுல் சப்போர்ட்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்த தலைவர்கள்!
சென்னை: நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7.2% என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்தது. இப்படிச் செய்தால், மாநிலத்தின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் எனவும், மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளது எனவும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மாநில உரிமையை காக்க அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 58 கட்சிகள் மட்டுமே பங்கேற்றனர். பாஜக, புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக் கட்சி, நாதக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய 5 கட்சிகள் பங்கேற்கவில்லை.
தலைவர்கள் கருத்து
இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் கூறிய முக்கிய கருத்துகள் பின்வருமாறு:
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானத்திற்கு அ.தி.மு.க முழு ஆதரவு அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7.2% என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதியின் சராசரி மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு இருக்காது.
- அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கொள்கை முரண்களை ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக கூடியிருக்கிறோம். கலந்துகொண்டுள்ள கட்சிகளுக்கு பாராட்டுகள். இந்தியாவை ஹிந்தியாவாக மாற்றாதீர்கள். ஜனநாயகம், கூட்டாட்சி இரண்டும் நம் இரண்டு கண்கள். இவை தேசிய அளவில் நிலைபெற்று இருக்க தற்போதைய எம்.பி.க்கள் எண்ணிக்கையே போதுமானது. எனவே, தொகுதி மறுசீரமைப்பு முயற்சி தேவையற்றது. தேர்தல் வரும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக்கான உரிய நிதியை வழங்காதது, மும்மொழிக் கொள்கை அமல்படுத்துவது இதையெல்லாம் பார்த்தால் எதேச்சதிகார போக்குதான் தெரிகிறது.
- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன்
தமிழ்நாடு தொகுதி வரையறைக்கு எதிராக இல்லை; தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலமும் பாதிப்படையாமல் மறுவரையறையை நேர்மையாக, வெளிப்படையாகச் செய்ய வேண்டும்
- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
தொகுதி மறுசீரமைப்பில் தலித் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக்கூடாது. ஏற்கனவே சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் சீரமைப்பு நடந்துள்ளது.
- விசிக தலைவர் திருமாவளவன்.
தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் அனைத்து தென் மாநில முதல்வர்களையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச வேண்டும். ஒருமித்த கருத்தை உருவாக்கி ஒரு கூட்டமைப்பாக சென்று நாம் வலியுறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது, அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு உறுதியான தீர்வு கிடைக்கும்.
- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
"தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். இது தேவையற்றது. தற்போது உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையே தொடர வேண்டும்."
- தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
"தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பான கூட்டத்தை கூட்டியுள்ளது. மாநில அரசின் தீர்மானத்தை தேமுதிக முழுமையாக ஆதரிக்கிறது"
- தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன்
தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் உச்சி மாநாட்டை முதலமைச்சர் நடத்த வேண்டும். ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்
- தமிமுன் அன்சாரி
"தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு மக்களை அடக்க நினைத்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கும்.
- தமமுக நிறுவனர் ஜான் பாண்டியன்
"தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இந்தியாவிலேயே முதன்முறையாக திமுக தலைமையிலான அரசு குரல் கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக திரண்டுள்ளனர்."
- கொங்கு இளைஞர் கட்சி தலைவர் உ.தனியரசு
"நிதானமும் தெளிவும் கொண்ட முதலமைச்சர் அவர்களால் மட்டும்தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். எனவே நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் எங்கள் ஆதரவு உண்டு."
- ஸ்ரீதர் வாண்டையார்
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications