Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சீட் எண்ணிக்கை குறைஞ்சா கூட பரவாயில்ல.. தவெக கூட்டணிக்கு வரட்டும்”.. அழைப்பு விடுத்த பாமக லீடர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இடம்பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், பாமக பொருளாளர் திலகபாமா, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவடைந்ததாக கூறப்படுகிறது. 8 சட்டசபை தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகளில் பாமக மும்மரமாக ஈடுப்பட்டு வருகிறது.

Amid Seat Talks PMK Extends Alliance Invite to Vijay s TVK in AIADMK Alliance

பாமக

சென்னையில் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்கப் பொதுக்குழு கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் கட்சியில் இணையும் விழாவும் இன்று பாமக மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில், மாநில பொருளாளர் திலகபாமா முன்னிலையில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த பாமக பொருளாளர் திலகபாமா, "பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழம் சின்னம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் யார் எப்போது வழக்கு தொடுத்தாலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு அத்தனை ஆவணங்களும் அன்புமணி ராமதாசிடம் இருக்கிறது என்பது தெரிந்து தான் அதிமுக தங்களது கூட்டணியில் பாமகவை இணைத்து கொண்டுள்ளது.

சீட் நம்பர் முக்கியம் இல்லை

எங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியம் அல்ல. திமுகவை விரட்டுவதற்காக, எல்லோரும் ஓர் அணியில் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எங்களுடைய நோக்கம் திமுகவை வீட்டிற்கு அனுப்புவதுதான். அதனால், தொகுதி எண்ணிக்கை குறித்து பாமக இதுவரை பேசவில்லை. அதிமுக கூட்டணி தற்பொது பலம் பொருந்திய கூட்டணியாக தான் உள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் அதிமுக உடன் மீண்டும் இணைந்த அமமுகவால் பலம் அதிகரித்துள்ளது. எங்களுடைய பொது எதிரி திமுக மட்டும் தான்.

திமுக கூட்டணியில் இருந்தே முக்கிய நிர்வாகிகள் வெளியே வந்து, எங்களது கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. திமுக மீது மக்களிடையே பரவலாக வெறுப்பு அலைகள் வீசிக்கொண்டு இருக்கிறது. ஆகையால் மக்கள் விரும்புவது நடைபெற வேண்டும். அதற்கு அதிமுக கூட்டணி ஒரு களமாக அமையும்.

தவெக விஜய்க்கு அழைப்பு

தமிழக வெற்றிக் கழகம் வரும் தேர்தலில் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு கிடைக்கும் வாக்குகள் அனைத்தும் திமுகவில் இருந்து பிரியும் வாக்காகவே இருக்கும். விஜய்யை பொறுத்தவரை ரசிகர்கள் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்கிற கேள்வி அனைவருக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் இருமுனைப் போட்டி அமைய வேண்டும். அதற்கு தவெக அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்" என்று திலகபாமா தெரிவித்தார்.

தவெகவில் நேற்று விருப்ப மனு விநியோகம் நடைபெற்ற நிலையில், ஒரு மணி நேரத்தில் சுமார் 10 ஆயிரம் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திலகபாமா,, "திரைத்துறையை நோக்கி பயணம் செய்கின்ற கூட்டத்தின் ஆர்வக்கோளாறாக தான் பார்க்கிறேன். இது ஒருப்போதும் ஓட்டாக மாறாது" என்று கூறியுள்ளார்.

தவெக - அதிமுக

அதிமுக தவெக இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வருகின்றன. முன்பு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியே, விஜய்யை கூட்டணிக்கு அழைக்கும் விதமாக பேசி வந்தார். ஆனால், கூட்டணி இல்லை என்று ஆனபிறகு இரு தரப்பும் மோதிக்கொண்டு வருகிறது. அண்மையில் கட்சி கூட்டத்தில் பேசிய விஜய் அதிமுகவை சீண்டினார். அதற்கு அதிமுக தலைவர்கள் பலரும் பதிலடி கொடுத்தனர். இந்தச் சூழலில் பாமக பொருளாளர் திலகபாமா, விஜய்யை அதிமுக கூட்டணிக்கு அழைத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+