சென்னையில் பிட்புல், ராட்வீலர் வாங்க தடை.. மீறினால் ரூ. 1 லட்சம் அபராதம் - மாநகராட்சி அதிரடி
சென்னை: தடை செய்யப்பட்ட நாய்கள் கடித்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட நாய் இனங்களான பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வளர்ப்பதற்குத் தடை விதித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாளை முதல் ராட்வீலர், பிட்புல் ரக நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னையில் தடை செய்யப்பட்ட நாய்கள் கடித்து பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்க கூடாது. நாளை முதல் ராட்வீலர், பிட்புல் ரக நாய்களுக்கு உரிமை பெற விண்ணப்பிப்பதற்கும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாம்ய உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஏற்கனவே ராட்வீலர், பிட்புல் நாய்கள் இனங்களை வைத்திருப்பவர்கள் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மையில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராட்வீலர், பிட்புல் ஆகிய நாய் இனங்கள் உரிமையாளரின் கட்டுப்பாட்டை மீறி ஆக்ரோஷமாக செயல்படுவதாலும், சாலையில் செல்பவர்களைக் கடித்துக் குதறுவதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை












Click it and Unblock the Notifications