Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive அமித்ஷா கேட்ட 14.. காலி செய்த எடப்பாடி.. பாஜக தலைமை நம்பவே நம்பாது.. ஓபிஎஸ் ஆதரவாளர் பரபர!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தலின்போது நடந்ததை வைத்து, பாஜக தலைமை எடப்பாடி பழனிசாமியை நம்பமாட்டார்கள் என ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.

சட்டமன்றத் தேர்தலின்போது, விஜயகாந்த், சசிகலாவை கூட்டணியில் சேர்ப்போம், 14 சீட்டை எங்களுக்கு கொடுத்துவிடுங்கள், நாங்கள் பிரித்துக்கொள்கிறோம் என அமித்ஷா கேட்டார். அப்போது எடப்பாடி, அவர்கள் தேவையே இல்லை நாம் தான் வெற்றி பெறுவோம் என்றார்.

உள்ளாட்சி தேர்தலிலும், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாமல், வேட்பாளர்களை அறிவித்துவிட்டு சேலத்திற்குப் போய்விட்டார், இதனால், எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைமை நம்பாது என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கல்யாண வீடாக இருந்தால் மாப்பிள்ளை

கல்யாண வீடாக இருந்தால் மாப்பிள்ளை

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அளித்துள்ள பேட்டியில், "எடப்பாடி பழனிசாமியின் மமதையால் தான் ஆட்சியை இழந்தோம். கூட்டத்தைப் பார்த்து, கூட்டணியை அரவணைக்காமல் விட்டதால் வந்த வினை தான் அதிமுக தோல்வி. ஓபிஎஸ் பேச்சைக் கேட்டு சாதுர்யமாக கூட்டணி அமைக்காததால் தோற்றுவிட்டோம். கல்யாண வீடாக இருந்தால் மாப்பிள்ளையாக இருக்கவேண்டும், சாவு வீடாக இருந்தால் பிணமாக இருக்கவேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் பாலிசி.

 தனித்து விடப்படுவார்

தனித்து விடப்படுவார்

ஓ.பன்னீர்செல்வம் தான் அடுத்து முதலமைச்சராக வருவார். அவர் தலைமையை ஏற்று வருவதாக இருந்தால் வாருங்கள். எங்களுக்கு நீங்கள் தேவையே இல்லை. வைத்திலிங்கம் சொல்வதுபோல, எடப்பாடி பழனிசாமி எங்களுடன் இணைய மறுத்தால் தனித்து விடப்படுவார். இப்போதும் அதிமுக, எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இல்லை. எல்லோரும், எடப்பாடியை கண்ட்ரோலில் வைத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அசைய வேண்டும் என்றால் கூட வேலுமணியை கேட்காமல் அசைய மாட்டார்.

மா.செவை மாற்ற முடியுமா?

மா.செவை மாற்ற முடியுமா?

வேலுமணியை கேட்காமல் ஈபிஎஸ்ஸால் எந்த வேலையும் செய்ய முடியாது. ஏதாவது 2 மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமியை தைரியம் இருந்தால் தூக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். தேர்தலில் தோல்வியடைந்த மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ் மாற்றச் சொன்னார். ஆனால், எடப்பாடி பழனிசாமி இன்றும் மாற்றாமல் வைத்திருக்கிறார். ஏனென்றால், எடப்பாடி பழனிசாமிக்க 'ஆமாஞ்சாமி' போடுபவர்கள் தான் மாவட்ட செயலாளர்களாக இருக்கிறார்கள்.

சவால்

சவால்

எங்கள் அணியில் அப்படி கிடையாது. சரியாகச் செயல்படவில்லை என்றால் மாவட்ட செயலாளரை மாற்றி விடுவோம். செயல்பாடு சரியில்லை என்றால் நிர்வாகிகளை மாற்றி விடுவோம். மதுரையில் கூட 2 மாவட்ட செயலாளர்களை மாற்றினோம். அதுபோல், எடப்பாடி பழனிசாமியை ஏதாவது ஒரு மாவட்டத்தில் மாவட்ட செயலாளரை மாற்றச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

தலைமை கழகத்திற்கு

தலைமை கழகத்திற்கு

நாங்கள் விரைவில் பொதுக்குழுவை நடத்துவோம். தற்போது பெரும்பாலான பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து விட்டோம். இன்னும் 10 சதவீதம் தான் பாக்கி. எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரப்போகிறது. தீர்ப்பு வந்தபிறகு, முறையாக நாங்கள் தலைமைக் கழகத்திற்குச் செல்வோம். இப்போது சென்றால், குண்டர்களோடு சென்றதாக அவதூறு செய்வார்கள். எதற்கு மீண்டும் பிரச்சனை என்றுதான் இப்போது செல்லாமல் தவிர்த்து வருகிறோம்.

 ஓபிஎஸ் போவார்

ஓபிஎஸ் போவார்

எடப்பாடி பழனிசாமி அணியினர், அதிமுக தலைமைக் கழகத்திலேயே குடித்துவிட்டு, சீட்டாடி, டான்ஸ் ஆடி, கேவலம் செய்தார்கள். அதிகார மையமாக இருந்த அந்த இடத்தையே அவமதித்து விட்டார்கள். ஓபிஎஸ் அங்கு சென்றால் தான் தலைமைக் கழகத்திற்கே அழகு. ஓ.பன்னீர்செல்வத்திடமே சாவியை ஒப்படைப்பார்கள். அதன்பிறகு முறையாக ஓபிஎஸ் அங்கு செல்வார். அதை நாங்கள் திருவிழாவாகக் கொண்டாடுவோம்.

 எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிடுவார்

எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிடுவார்

உள்ளாட்சி தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாமல், வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு சேலத்திற்குச் சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. பின்னர், பாஜக தனித்துப் போட்டியிட்டது. அதையெல்லாம் வைத்து, பாஜக தலைமை, எடப்பாடி பழனிசாமி தங்களை ஏமாற்றி விடுவார்கள் என்று நினைக்கிறது ஈபிஎஸ்ஸை அவர்கள் ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை.

14 சீட் கேட்டாங்க

14 சீட் கேட்டாங்க

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும்போது ஹோட்டலில் ஆலோசனை நடந்தது. அப்போது அமித்ஷா, மொத்தமாக 14 சீட்டை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். விஜயகாந்த், சசிகலாவை சேர்த்துக்கொள்ளலாம், நாம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால், உளவுத்துறை ரிப்போர்ட் இருக்கு.. நிச்சயமாக 150 சீட்டை பிடிப்போம், அவர்கள் எல்லாம் தேவையில்லை என்று ஈபிஎஸ் சொன்னதால் தான் இன்று ஆட்சியை பறிகொடுத்து அமர்ந்திருக்கிறோம். அன்று தான் சொன்னதை எடப்பாடி கேட்காததால், இன்று அவருடன் கூட்டணி வைக்க விரும்பாமல் இருக்கலாம்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+