சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம்
சென்னை: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் சீனியர்களுக்கு பதில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாஜகவின் இந்த முயற்சிக்கு பின்னால் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நடந்த சம்பவங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. பாஜக சார்பில் அதிமுகவிடம் 60 தொகுதிகள் வரை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுகவோ 30 தொகுதிக்குள்ளாக தான் கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியாகவில்லை.

சட்டபை தேர்தல் தேதி வெளியான பிறகு அடுத்தடுத்து இதுபற்றிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜகவின் வேட்பாளர்கள் தேர்வு எப்படி இருக்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
புதுமுகங்களுக்கு வாய்ப்பு
தேர்தல் நெருங்கி உள்ளதால் பாஜகவில் சீட் வாங்க பலரும் முயன்று வருகின்றனர். சீனியர் தலைவர்கள் முதல் இளம் தலைவர்கள் வரை பலரும் காய்நகர்த்தி வருகின்றனர். இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாலும், பாஜக ஓரளவு வளர்ந்துள்ளதாலும் பலரும் தேர்தலில் களமிறங்க ஆர்வமாக உள்ளனர்.
பின்னணியில் 3 விஷயங்கள்
இந்நிலையில் தான் வரும் தேர்தலில் சீனியர்களுக்கு பதில் பல புதிய முகங்களை தேர்தலில் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் பின்னணியில் 3 முக்கிய விஷயங்கள் உள்ளன. அந்த விஷயங்கள் என்னென்ன? பாஜக மேலிடம் போடும் கணக்கு என்ன? என்பது பற்றிய விவரம் வருமாறு:
முதல் விஷயம்
தமிழகத்தில் தற்போது பாஜக வளர்ந்து வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றால் இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும். இதனால் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படி செய்யும்போது அவர்களால் எதிர்காலத்தில் தமிழகத்தில் பாஜக நன்கு வளர்ச்சியடையும் என்று பாஜக மேலிடம் நம்புகிறது.
தற்போது திமுக மீது அதிருப்தி அலை உள்ளது. அதேபோல் பாஜக, அதிமுக கூட்டணியில் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி இரட்டை இலக்கத்தில் எம்எல்ஏக்களை வெற்றி பெற வைக்க வேண்டும். இதனால் சர்ச்சையில் சிக்காத, கட்சிக்கு உழைக்கும் புதுமுகங்கள் தான் சரியான தேர்வாக இருக்கும் என்று பாஜக நம்புகிறது. இது முதல் விஷயமாகும்.
2வது விஷயம்
2வது காரணம் பாஜகவில் சீனியர் தலைவராக இருக்கும் பலருக்கும் பலமுறை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் உதயநிதி ஸ்டாலின், தவெகவில் விஜய் என இளம் வயதினர் முன்நிறுத்தப்படுகின்றனர். இப்படி இருக்கும்போது பாஜகவும் இளம் தலைவர்களை நோக்கி செல்ல வேண்டும். இதனால் படிப்படியா சீனியர் தலைவர்களை தேர்தல் அரசியலில் ஓரம் கட்டுவது அவசியம் என பாஜக நினைக்கிறது.
இதனால் அவர்களுக்கு பதில் இளைஞர்களுக்கும், இளம்பெண் தலைவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது தமிழக மகளிர் இடையே கட்சியை கொண்டு செல்லும். இது தான் கட்சியை புத்துணர்வுடன் எதிர்காலத்தில் வைத்திருக்கும் என்று பாஜக மேலிடம் நம்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
3வது விஷயம்
அதோடு 2வது விஷயம் என்னவென்றால் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பல புதுமுகங்கள் அதிகப்படியான வாக்குகளை பெற்றனர். முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சிகே சரஸ்வதி, நடிகை குஷ்பு, போஜராஜன் உள்பட 8 பேரை புதுமுகங்களாக பாஜக கடந்த 2021ல் களமிறக்கியது. இதில் பலரும் அதிகப்படியான ஓட்டுகளை பெற்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அண்ணாமலை 38 சதவீத ஓட்டுகளை பெற்றார். மொடக்குறிச்சியில் சிகே சரஸ்வதி 42 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஊட்டியில் போஜராஜன் 42 சதவீத ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார்.
அதேபோல், ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு 39,405 ஓட்டுகள் வாங்கி 2ம் இடம் பிடித்தார். இதனால் தமிழகத்தில் பாஜக சார்பில் களமிறக்கப்படும் புதுமுகங்களுக்கு அதிக ஓட்டுகள் கிடைப்பதாக பாஜக நம்புகிறது. அதனை இந்த தேர்தலில் பின்பற்ற நினைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி?












Click it and Unblock the Notifications