புண்படுத்திட்டாரு..தவெக மேடையில் முருகப் பெருமானுக்கு இழுக்கு! விஜய், வேல்முருகன் எதிராக பாஜக புகார்
மதுரை: தவெக மேடையில் முருகப்பெருமான் பாடலை இழிவுபடுத்தும் விதத்தில் பாடிய பாடகர் மற்றும் தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாஜக பிரச்சார பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கபட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழா மேடையில் பாடகர் வேல்முருகன் முருகப்பெருமான் பாடலை மறு உருவாக்கம் செய்து விஜயை புகழ்ந்து பாடினார்.

இந்நிலையில் முருகப்பெருமானின் பாடலை இழிவுபடுத்தும் வகையில் பாடிய பாடகர் வேல்முருகன் மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும், ஆதவ் அர்ஜூன் மற்றும் பொதுச் செயலாளர் என் ஆனந்த் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக பிரச்சார பிரிவு சார்பில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரச்சார பிரிவு மாநில துணைச் செயலாளர் சுரேஷ் பேசிய போது," முருகப்பெருமானை இழிவு படுத்தி பாடிய பாடகர் வேல்முருகன் மீதும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனா மற்றும் ஆனந்த் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம். நடிகர் விஜய் மேடைகளிலும் சினிமாக்களிலும் இந்து கடவுள் கடவுள்களை இழிவுபடுத்தும், வகையில் செயல்படுகிறார்.
இளைஞர்களை மடைமாற்றம் செய்து வருகிறார். மேலும் விஜய் மாற்று மத நம்பிக்கையை இழிவுபடுத்திவருகிறார். முருகப்பெருமானின் பாடலை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்ட விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் திமுகவின் ஆள் தான் விஜய் திமுக இந்து மதத்தினை இழிவு படுத்துவது போல விஜயும் செய்துவருகிறார். இதனை தமிழக வெற்றி கழகம் நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவுள்ளோம்" என தெரிவித்தார்.
-
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
Vijay: 5 ஆண்டுகளில் விஜயின் வருமானம் எவ்வளவு? 2022ல் மட்டும் 237 கோடியா? வாயை பிளக்க வைத்த அபிடவிட் விவரம்! -
விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு












Click it and Unblock the Notifications