சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செருப்பு வைக்கும் அலமாரியில் அம்பேத்கர் படத்தை வைத்தேனா? பாஜகவின் வானதி சீனிவாசன் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி அண்ணல் அம்பேத்கர் படத்தை தமது வீட்டில் செருப்பு வைக்கும் அலமாரியில் வைத்து அவமரியாதை செய்தததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் மறுத்துள்ளார்.

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது படத்துக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாஜவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன், டேப்லெட்டில் உள்ள அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் படம் வெளியானது.

BJP senior leader Vanathi Srinivasan clarifies on Ambedkar Photo row

ஆனால் தமது வீட்டுக்கு வெளியே செருப்புகள் வைக்கும் அலமாரியில் அம்பேத்கர் படத்தை வைத்திருந்தார் வானதி சீனிவாசன் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதனை மறுத்துள்ள வானதி சீனிவாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் சில படங்களுடன் அளித்துள்ள விளக்கம்:

நான் நேற்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் படத்தை அவமரியாதை செய்துவிட்டேன் என சமூக ஊடகங்களில் ஒரு சிலர் குறிப்பிட்டதாக அறிந்தேன்.... அது தவறு...

என் வீட்டின் முன்பகுதியில் தான் ஓவ்வொரு நாளும் பட்டியலின பெண்களுக்கு உதவி வருகிறோம்..... செயல்களை மதிப்பிடு...!!! இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

English summary
Senior BJP leader Vanathi Srinivasan has clarified on the Ambedkar Photo row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X