திரிஷா வீட்டை சுத்துப் போட்ட போலீஸ்..அங்குல அங்குலமாய் அலசிய ஆபீசர்ஸ்! அடிக்கடி வரும் ‘மர்ம’ மெயில்!
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரபல நடிகையான திரிஷா வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பல முறை மிரட்டல் வந்தும் ஒவ்வொரு முறை அது புரளி என கூறும் போலீசார், இதுவரை மிரட்டல் ஆசாமியை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்திற்கு நேற்று மின்னஞ்சல் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. அந்த மின்னஞ்சலில், சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக அவசர நடவடிக்கையில் இறங்கினர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் மோப்பநாய்கள் உதவியுடன் நடிகை திரிஷாவின் வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. வீட்டின் உள்ளும் வெளியும் முழுமையாக ஆய்வு செய்தனர்.
நடிகை திரிஷா
ஆனால் நீண்ட நேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில் எந்தவித வெடிபொருளும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், வந்த மிரட்டல் வெறும் புரளி என அதிகாரிகள் உறுதி செய்தனர். கடந்த சில நாட்களாகவே சென்னையில் உள்ள பல முக்கிய இடங்களுக்கு இதுபோன்ற மிரட்டல் தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியவை குறிவைத்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல்
குறிப்பாக, நடிகை திரிஷாவின் வீட்டுக்கு இதுவரை ஐந்து முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நபர் திரும்பத் திரும்ப இதுபோன்ற மிரட்டல் விடுக்கிறாரா அல்லது இதற்குப் பின்னால் ஒரு குழு செயல்படுகிறதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைபர் கிரைம் போலீஸ்
அதேபோல் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள வங்கதேச துணை தூதரகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடங்களிலும் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். ஆனால் அங்கும் எந்தவித வெடிபொருளும் கிடைக்கவில்லை. இந்த தொடர் மிரட்டல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மின்னஞ்சலும் எங்கிருந்து அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிய சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
தொடர் வெடிகுண்டு மிரட்டல்
இதேபோன்ற சம்பவங்கள் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே நடைபெற்று வருகின்றன. அப்போது நடிகை திரிஷா வீடு மட்டுமல்லாமல், பிரபல இயக்குனர் மணிரத்தினம், நடிகர் விஷால் உள்ளிட்டோரின் இடங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. மேலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அவ்வப்போது மிரட்டல் தகவல்கள் வந்திருந்தது. மேலும், நடிகர் ரஜினிகாந்த், அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. மேலும் சென்னை நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் சென்னை மற்றும் ரஷ்ய தூதரகத்துக்கும் அப்போது மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
மர்ம நபர்
தற்போது ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் காவல்துறை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் தினமும் போலீசார் பல இடங்களில் சோதனை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பும் நபர் மிகவும் நுணுக்கமாக செயல்பவதாகவும், போலியான மின்னஞ்சல் முகவரிகள் பயன்படுத்தப்படுவதுடன், தனது இருப்பிடத்தை மறைக்க விபிஎன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுவதால், அந்த நபரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications