சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுங்க வைத்த சென்னை சிறுமி பலாத்காரம்.. இன்ஸ்பெக்டர், பாஜக பிரமுகர் உட்பட 13 பேருக்கு 20 வருட சிறை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் , காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அவரது உறவினர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் தாயார் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

Chennai girl molested case 21 persons punishment details announced

இந்த வழக்கில் சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கூட்டு வன்புணர்வு செய்த 5 பேர்.. ஆடையின்றி 2 கிமீ நடந்தே போன சிறுமி.. வேடிக்கை பார்த்த உ.பி மக்கள் கூட்டு வன்புணர்வு செய்த 5 பேர்.. ஆடையின்றி 2 கிமீ நடந்தே போன சிறுமி.. வேடிக்கை பார்த்த உ.பி மக்கள்

வண்ணாரப்பேட்டை காவல் நிலைய வழக்கில் 22 பேர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், இரு பெண்கள் உள்பட மற்ற 4 பேர் தலைமறைவாகினர். மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், மாரீஸ்வரன் என்பவர் இறந்துவிட்டார்.

Chennai girl molested case 21 persons punishment details announced

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் புகழேந்தி, காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், தனியார் தொலைக்காட்சி ஊழியர் வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தரம், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண், எஸ்.பி.ஆர்.கண்ணன் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார்.

இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சிறுமியின் சித்தி, சித்தப்பா உள்பட உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், சிவில் சப்ளைஸ் அதிகாரி கண்ணன், அனிதா, காமேஷ்வர்ராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, ராஜாசுந்தர் நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
A special court for POCSO cases has sentenced 8 people to life imprisonment in the case of sexual harassment of a girl in Chennai and 13 people, including police inspector pugazendi and BJP Member Rajendran, to 20 years of Jail imprisonment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X