கடனை அடைக்காவிட்டால் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் ஏலம் விடப்படும் - ஐகோர்ட் இறுதி எச்சரிக்கை!
சென்னை: ஜனவரி 19 ஆம் தேதிக்குள் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால் கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தை பொது ஏலத்தில் விடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. பைனான்ஸ் பிரச்சனையால் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில், உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் தாஸ் என்பவர் திவாலானவர் என கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துகளை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன் லால் சுந்தர் தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது. அந்த தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அந்த தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏற்கனவே பலமுறை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், முழு தொகையையும் செலுத்தவில்லை. கங்குவா, தங்கலான் உள்ளிட்ட படங்களை திரையிடுவதற்கு முன் 1 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்துவதாக உறுதி அளித்து நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று திரைப்படத்தை வெளியிட அனுமதி பெற்றது. இதுவரை 7 முறை கடனை செலுத்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அதனால், கடனை செலுத்தாமல் "வா வாத்தியார்" படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் மாறுதல்கள் செய்யக் கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவினம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள், எஸ்.எம். சுப்ரமணியம், குமரப்பன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர் தரப்பில், கடன் தொகைக்காக சுமார் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்த தயாராக இருப்பதால் இறுதி வாய்ப்பாக 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே பல முறை அவகாசம் வழங்கப்பட்டது. கடனை அடைக்கவில்லை. ஞானவேல்ராஜா தன்னை திவாலானவர் என அறிவித்தால் நீதிமன்றமே அவரது சொத்துகளை பறிமுதல் செய்து கடனை அடைக்கும். 'வா வாத்தியார்' திரைப்படத்தை பொது ஏலத்தில் விட்டு அதில் வரும் பணத்தில் கடனை அடைக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், ஜன 19 ஆம் தேதிக்குள் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் படத்தை பொது ஏலத்தில் விடுவதற்கான அனுமதியை நீதிமன்றம் சொத்தாட்சியிருக்கு வழங்கும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications