எந்த டாக்டராவது இப்படி செய்வாங்களா? கோக் குடித்ததும் மயங்கிய மாணவி! எழுந்து பார்த்ததும் ஷாக்!
சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவியொருவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. பிசியோதெரபி நான்காம் ஆண்டு படித்து வருகிறார். படிப்பின் ஒரு பகுதியாக, பெரம்பூரில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்றில் மாதம் ரூ.4 ஆயிரம் சம்பளத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
அந்த மருத்துவமனையின் உரிமையாளரான பிசியோதெரபிஸ்ட் டாக்டர் கார்த்திகேயன் மீது தான் மாணவி பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ மாணவி
இந்த சம்பவம் தொடர்பாக மாணவி அளித்துள்ள காரில்," கடந்த சில நாட்களுக்கு முன்பு காலை 6.30 மணியளவில் டாக்டர் கார்த்திகேயன் எனக்கு தொலைபேசியில் அழைத்து, ஒரு நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டும், நேரில் வர வேண்டும் என கூறினார். இதை நம்பி நான் பகல் 1 மணி அளவில் மருத்துவமனைக்கு சென்றேன். பின்னர், ஒரு பெண்ணுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று கூறி, என்னை தனது காரில் அழைத்துச் சென்றார்.
மயக்க மருந்து
அப்போது அவர், "காபி அல்லது டீ குடிப்பாயா?" என்று கேட்டார். எனக்கு அந்த பழக்கம் இல்லை என்று சொன்னதும், காரில் இருந்த குளிர்பானத்தை கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களிலேயே எனக்கு தலை சுற்றி மயக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு என்ன நடந்தது எனக்கு நினைவில்லை. நீண்ட நேரம் கழித்து கண் விழித்தபோது, நான் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அறையில் இருந்தேன். என் உடலில் ஆடைகள் எதுவும் இல்லை. அருகில் பார்த்தபோது, என்னை காரில் அழைத்துச் சென்ற டாக்டரும் ஆடையின்றி படுக்கையில் இருந்தார்.
பாலியல் வன்கொடுமை
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த நான் அவரை தள்ளிவிட்டு, விரைவாக உடைகளை அணிந்து அங்கிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்தேன். பயமும் அவமானமும் காரணமாக, ஆரம்பத்தில் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் இருந்தேன். பின்னர் மனஉளைச்சல் அதிகரித்ததால், என் அக்காவிடம் நடந்ததை கூறினேன். இதையடுத்து குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடமும், அவரது மனைவியிடமும் இதுபற்றி கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் டாக்டர் கார்த்திகேயன், இப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுத்து வந்துள்ளார்.
மகளிர் போலீஸ்
இதையடுத்து மாணவி முதலில் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கிருந்து கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு புகார் பதிவு செய்யப்பட்டது. மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மாணவி கூறிய தகவல்களை உறுதி செய்தனர். விசாரணையில், மாணவியின் புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது.
குளிர்பானத்தில் மயக்க மருந்து
போலீஸ் விசாரணையில், டாக்டர் கார்த்திகேயன் திட்டமிட்டே மாணவியை ஏமாற்றி அழைத்துச் சென்றதும், கோககோலா குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து முன்கூட்டியே தயாராக வைத்திருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. கொளத்தூர் ஜெயந்தி நகர் 2-வது தெருவில் உள்ள சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் கைது
இதனைத் தொடர்ந்து, பிசியோதெரபிஸ்ட் டாக்டர் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். அவர்மீது பி.என்.எஸ். 123 (குற்ற நோக்கத்துடன் விஷம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள் கொடுத்தல்), பி.என்.எஸ். 63 (பாலியல் வன்கொடுமை), பி.என்.எஸ். 64 (வன்கொடுமை தண்டனை) ஆகிய மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன்











Click it and Unblock the Notifications