பாஜகவுக்கு போட்டி! பொள்ளாச்சியில் பிரம்மாண்ட திமுக பொதுக்கூட்டம்! செந்தில் பாலாஜி மும்முரம்!
கோவை: பாரதிய ஜனதா கட்சிக்கு போட்டியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரம்மாண்ட திமுக பொதுக்கூட்டத்தை நடத்த அமைச்சர் செந்தில் பாலாஜி மும்முரம் காட்டி வருகிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் அந்த பொதுக்கூட்டத்தில் 15,000 வரை பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
அதற்கேற்றவாறு இடத்தை தேர்வு செய்து அங்கு திமுக பொதுக்கூட்டத்துக்கான முன்னேற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கோவை மாவட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் இம்மாதம் 15-ஆம் தேதி கோவை ஈச்சனாரி அருகே நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்பதற்காக 14-ஆம் தேதி மாலையே அவர் கோவை செல்கிறார். அங்கு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், கோவை தொழில்முனைவோர்களுடன் ஒரு மணி நேரம் கலந்துரையாடுகிறார்.

திமுக பொதுக்கூட்டம்
அதைத் தொடர்ந்து 15-ஆம் தேதி காலை கோவையில் அரசு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அன்றைய தினம் மாலையே பொள்ளாச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். மோடி அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தை அண்மையில் தான் அங்கு பாஜக நடத்தியிருந்தது. சுமார் 10,000 பேர் வரை பங்கேற்ற அந்த பாஜக பொதுக்கூட்டத்துக்கு போட்டியாக திமுக இன்னும் பல பிரம்மாண்டத்தை காட்டவுள்ளது.

பொள்ளாச்சி தொகுதி
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் 15,000 பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றவாறு இடம் தேர்வு செய்யப்பட்டு நாற்காலிகள் போடப்படவுள்ளன. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்கிற முறையில் இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து கோவையில் முகாமிட்டு கவனித்து வருகிறார். பொள்ளாச்சி தொகுதியை பொறுத்தவரை திமுக எப்படியும் வெற்றிபெறும் என முதல்வர் ஸ்டாலின் எண்ணிய நிலையில் அதற்கு நேர்மாறாக தேர்தல் முடிவு வந்தது.
Recommended Video

முதல்வர் உரை
இதனிடையே கோவை மாவட்டம் பொள்ளாச்சி நடைபெறவுள்ள திமுக பொதுக்கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முதல்வர் ஸ்டாலின் வெளுத்து வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க












Click it and Unblock the Notifications