Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் - தமிழகத்திற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு

தமிழகத்திற்கு 90ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்துக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தினைத் தொடர்ந்து, மத்திய அரசு 90,000 மெட்ரிக் டன் யூரியாவை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் யூரியாவின் தேவை அதிகரித்ததைத்தொடர்ந்து, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர். மேலும், அதிக அளவு தேவைப்படும் யூரியா தங்கு தடையின்றி நியாயமான விலையில், எவ்வித நிபந்தனையுமின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்திற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 90ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு வர உள்ளது என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காரைக்காலில் உள்ள 4,000 மெட்ரிக் டன் யூரியா ரயிலில் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

CM writes letter to Central Government - 90 thousand metric tons of urea allotted to Tamil Nadu

தமிழகத்தில் யூரியாவின் தேவை அதிகரித்ததைத்தொடர்ந்து, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர். மேலும், அதிக அளவு தேவைப்படும் யூரியா தங்கு தடையின்றி நியாயமான விலையில், எவ்வித நிபந்தனையுமின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய உரத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், வெகு விரையில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு, டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கான உரத் தேவை அதிகரித்துள்ளதால், தமிழ்நாட்டிற்கு கூடுதல் உரம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் தமிழகத்துக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசிற்கு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி எழுதிய கடிதத்தினைத் தொடர்ந்து, மத்திய அரசு 90,000 மெட்ரிக் டன் யூரியாவை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்சமயம் நிலவிவரும் சாதகமான பருவமழை காரணமாக, 13.747லட்சம் ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டதில், இதுநாள்வரை 7.816 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடப்பு சம்பா பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களான சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றின் சாகுபடி ஒட்டுமொத்தமாக 24.829 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக யூரியா மற்றும் டிஏபி உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான யூரியா, டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்கள் முறையே 1,43,500 மெட்ரிக் டன், 4,480 மெட்ரிக் டன் மற்றும் 8,140 மெட்ரிக் டன் என மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. யூரியா 1,43,500 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இதுநாள்வரை உர உற்பத்தி நிறுவனங்களால் 77,863 மெட்ரிக் டன் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மத்திய அரசின் ஒதுக்கீட்டின்படி 63,000 மெட்ரிக் டன் இறக்குமதி யூரியா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+