“குரங்கு, நாய்”.. வாயைவிட்ட அண்ணாமலை! “ஆக்ஷன்” எடுப்போம்.. மீடியாக்கள் புறக்கணிக்கனும் - சிஎம்பிசி
சென்னை: பேட்டி எடுக்க வந்த பத்திரிகையாளர்களை நோக்கி மரத்தின் மீது குரங்கு தாவுவதைபோல் சுற்றி சுற்றி வருகிறீர்களே என்று கேட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊடகங்கள் அவரை புறக்கணிக்க வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தெரிவித்து உள்ளது.
தாய்மொழிக்கு திமுக அரசு முடிவுரை எழுத முயற்சி செய்வதாக கூறி கடலூரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பத்திரிகையாளர் மைக்குகளுடன் அண்ணாமலை அருகே சென்று பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது அவர்களை நோக்கி அண்ணாமலை ஆவேசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை பேச்சு
தன்னை நோக்கி நெருங்கி வந்த பத்திரிகையாளர்களிடம், "மரத்தின் மேல் குரங்கு தாவுவதைபோல் சுற்றி சுற்றி வருகிறீர்களே. சாப்பிட செல்லும்போது நான் என்ன சொன்னேன்? மரியாதையாக நின்று நீங்கள் எல்லாம் சாப்பிடுங்கள் என்று சொன்னேனா? ஊரில் நாய், பேய், சாராயம் விற்பவர்கள் சொல்வதை எல்லாம் கேட்பீர்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? நகருங்கள்" என்று காட்டமாக சொல்லிவிட்டு சென்றார்.

வலுக்கும் எதிர்ப்பு
கடலூரில் அண்ணாமலை நடந்துகொண்ட விதம் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அண்ணாமலை பத்திரிகையாளர்களை நோக்கி ஆவேசமாக பேசிவிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் அண்ணாமலையின் நடத்தைக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

சிஎம்பிசி கண்டனம்
இந்த நிலையில் கடலூரில் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து ட்விட்டரில் அந்த அமைப்பு அண்ணாமலை பேசிய வீடியோயை பகிர்ந்து இருக்கிறது.

பாடம் புகட்டுவோம்
அத்துடன், "பத்திரிகையாளர்களிடம் மீண்டும் கீழ்த்தரமாக நடந்துகொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த செயலால் அரசியல் தலைவருக்கான மரியாதையை அவர் இழந்துள்ளார். பத்திரிகையாளர்கள் சரியான பாடம் புகட்டுவோம். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

புறக்கணிக்க வேண்டும்
அண்ணாமலையின் செயல், ஊடக நிறுவனங்களையும் அவமதித்ததாகும். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும்வரை அனைத்து ஊடகங்களும் அவரை புறக்கணிக்க வேண்டும்." என்று வலியுறுத்தி இருக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அனைத்து ஊடகங்களையும், அதன் ஆசிரியர்களையும் டேக் செய்து உள்ளது.

தாக்க முயற்சி
இதற்கு முன்னதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பாஜகவை சேர்ந்த பிரமுகர்களும் பத்திரிகையாளர்களை தொடர்ந்து அவமதித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை கலந்துகொண்ட நிகழ்வை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை கட்சி நிர்வாகிகள் தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

எச்.ராஜா பேச்சு
கடந்த ஆகஸ்டு மாதம் தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரை பார்த்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, நீ கிறிஸ்தவன் என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது. கடந்த மே மாதம் சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்க நின்ற பாஜகவை சேர்ந்த பிரமுகர் பெண் பிரமுகரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டது கண்டனத்துக்கு ஆளானது.

அன்றும் அண்ணாமலை
கடந்த மே மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பொது இடங்களில் பாஜக பேனர் வைத்தது தொடர்பாக தன்னை நோக்கி கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரிடம், குறிப்பிட்ட தொகையை சொல்லி ஏலம் விடுவதை போல் பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று அண்ணாமலை பேசியதற்கு மன்னிப்பு கேட்குமாறு சி.எம்.பி.சி. கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
-
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications