விவசாயிகள் கவனத்திற்கு! மழை ஆரம்பிச்சிருச்சு.. இந்த நேரத்துல இதை செய்யாதீங்க! அரசு அன்பான வேண்டுகோள்
சென்னை: பருவமழை துவங்கிவிட்டதாலும், வெயில் குறைந்து, மேகமூட்டமாக உள்ளதாலும், பயிரின் தேவைக்கு அதிகமாக விவசாயிகள் உரமிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், உரம் தொடர்பான புகார்களை 9363440360 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவோ வாய் மொழியாகவோ விவசாயிகள் தெரிவிக்கலாம் என அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

ரசாயன உரங்கள்
நடப்பாண்டில் தமிழகத்தில் நிலவும் சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பயிர் சாகுபடிக்குத் தேவையான இரசாயன உரங்களை முன்னரே கணித்து, போதுமான அளவுக்கு இரசாயன உரங்களை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் உரத்துறையினை வலியுறுத்தியதன் காரணமாக, தற்சமயம், தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 94,377 மெட்ரிக் டன் யூரியா, 48,060 மெட்ரிக் டன் டிஏபி, 35,255 மெட்ரிக் டன் பொட்டாஷ், 1,71,156 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு உள்ளது.

நவம்பர் மாத உர ஒதுக்கீடு
பயிர் சாகுபடியினை முன்னரே கணித்து, அதிகரித்து வரும் உரத்தேவையினை ஒன்றிய அரசுக்கு தெரிவித்ததன் காரணமாக, நவம்பர் மாதத்தில், 1,46,720 மெட்ரிக் டன் யூரியா, 32,260 மெட்ரிக் டன் டிஏபி, 29,000 மெட்ரிக் டன் பொட்டாஷ், 78,350 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தமிழகத்திற்கு வழங்க ஒன்றிய அரசின் உரத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் நாட்களில் புயல், மழை அதிகமாக இருக்கும் என்பதால், உரம் விநியோகம் பாதிக்காதவாறு, இறக்குமதி செய்யப்படும் உரங்களை தூத்துக்குடி, மங்களூர் துறைமுகங்கள் மூலமாக தமிழகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

புகாருக்கு உதவி மையம்
மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் உர விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி, சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் உர உதவி மையம் அமைக்கப்பட்டு, வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கி வருகிறது. உரம் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால், விவசாயிகள் 9363440360 என்ற எண்ணை Whatsapp மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ தெரிவிக்கலாம்.

மண் ஆய்வு
தற்போது, பருவமழை துவங்கிவிட்டதாலும், வெயில் குறைந்து, மேகமூட்டமாக உள்ளதாலும், பயிரின் தேவைக்கும் அதிகமாக விவசாயிகள் உரமிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிக உரமிட்டால், செலவு அதிகமாகும் என்பதுடன், பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட்டு, மகசூல் குறையலாம் என்பதால், மண் ஆய்வின் அடிப்படையிலோ அல்லது துறை அலுவலர்களின் பரிந்துரைப்படி உரமிட்டு, விவசாயிகள் அதிக மகசூல் பெற வேண்டும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications