சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்க சோனியா பரிந்துரைத்த நபர்.. கதவை சட்டென சாத்திய திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு வெளியில் அதிகம் அறியப்படாத காங்கிரஸின் புள்ளிவிவர பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியை சோனியா பரிந்துரைத்திருக்கிறார். ஆனால் திமுகவோ வேறு ஒரு கணக்குப் போட்டு பின்னர் பார்த்து கொள்ளலாம் என கதவை மூடிவிட்டதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக ராஜ்யசபா எம்.பி. முகமது ஜான் காலமாகிவிட்டார். ராஜ்யசபா எம்.பி.க்களாக இருந்த கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் சட்டசபை தேர்தலில் வென்று எம்.எல்.ஏக்களானதால் பதவியை ராஜினாமா செய்தனர்.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் 3 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. 3 இடங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டால் சட்டசபை எம்.எல்.ஏக்களின் பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 2 எம்.பி. இடங்களும் அதிமுகவுக்கு 1 எம்.பி. இடமும் கிடைக்கும்.

உ.பி. தேர்தல்...து.மு. பதவி, ராஜ்யசபா சீட்- சொன்னபடி நடக்கலைன்னா.. பாஜக-வை மிரட்டும் லோக்கல் கட்சி! உ.பி. தேர்தல்...து.மு. பதவி, ராஜ்யசபா சீட்- சொன்னபடி நடக்கலைன்னா.. பாஜக-வை மிரட்டும் லோக்கல் கட்சி!

திமுகவுக்கு 3 இடங்கள்

திமுகவுக்கு 3 இடங்கள்

முகமது ஜான் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தனியாகவும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு தனியாகவும் தேர்தல் நடத்தப்பட்டால் திமுகவுக்கு 3 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் கிடைக்கும். ராஜ்யசபாவில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியான திமுகவின் கை ஓங்குவதை டெல்லியும் விரும்பவில்லை. இதனால் 3 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கான தேர்தல்களையும் ஒன்றாக நடத்தும் எண்ணத்தில்தான் இருக்கிறார்களாம்.

திமுகவில் கடும் போட்டி

திமுகவில் கடும் போட்டி

இதனிடையே ராஜ்யசபா சீட் கேட்டு திமுகவில் இதுவரை இல்லாத வகையில் பலநூறு பேர் முட்டி மோதுகின்றனர். சட்டசபை தேர்தலில் தோற்ற சீனியர்கள் 3 பேருக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கலாம் என பரவிய தகவலால் திமுகவின் மூத்த நிர்வாகிகள், கட்சிக்காக பாடுபட பலரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனை சரிகட்டும் வகையில் அனைவரது வாயையும் அடைக்கும் வகையில் ராஜ்யசபா வேட்பாளர்களை திமுக அறிவிக்க இருக்கிறது.

சீட் கேட்கும் காங்கிரஸ்

சீட் கேட்கும் காங்கிரஸ்

இன்னொரு பக்கம் தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்கிறதாம் காங்கிரஸ். அண்மையில் டெல்லி சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இதுபற்றி வெளிப்படையாகவே சோனியா, ராகுல் காந்தி இருவரும் பேசியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வல்லுநராக கருதப்படும் பிரவீன் சக்கரவர்த்தியை ராஜ்யசபா எம்.பி.யாக்க திமுக உதவ வேண்டும் என்று டெல்லி பயணத்தின் போது முதல்வர் ஸ்டாலினிடம், சோனியா குடும்பம் கோரிக்கை வைத்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆகட்டும் பார்க்கலாம் என கூறி இருந்தார்.

காங்கிரஸுக்கு கதவை மூடிய திமுக

காங்கிரஸுக்கு கதவை மூடிய திமுக

ஆனால் திமுகவிலேயே ஏகப்பட்ட போட்டி நிலவுகிறது; இதனால் இப்போதைக்கு காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் தரவேண்டாம்; அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என்கிற இறுதி முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலும் சோனியா குடும்பத்துக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கிறது.

குலாம் நபி ஆசாத் திடீர் மூவ்- காங். ஷாக்

குலாம் நபி ஆசாத் திடீர் மூவ்- காங். ஷாக்

இந்த நிலையில் புதிய ட்விஸ்ட்டாக சோனியா குடும்பத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் குலாம்நபி ஆசாத், திமுக தலைமையுடன் தொடர்பு கொண்டு ராஜ்யசபா எம்.பி. சீட் குறித்து விவாதித்திருக்கிறாராம். இந்த தகவலும் சோனியா குடும்பத்துக்குப் போயிருக்கிறது. இதனையடுத்துதான் திமுக தரப்புடன் மீண்டும் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் நடத்தி வருகிறது. இதற்காகவே மூத்த காங்கிரஸ் தலைவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.

English summary
Sources said that Cong High Command seeks one Rajya Sabha Seat from DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X