பாஜக ‘லெட்டர்’ கேம் எடப்பாடியை ‘கார்னர்’ செய்யவா? கூப்பிடவே இல்லை.. பாயிண்ட் பிடிக்கும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : "கிட்ட போனா கடிக்குது.. எட்டி நின்னா உதைக்குது" எனும் கதையாகத்தான் இருக்கிறது அதிமுகவில் நடந்து வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல். எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும் வகையில் டெல்லியில் இருந்து வந்த கடிதங்கள் ஓபிஎஸ் தரப்பை டென்ஷனாக்கின. இந்நிலையில், யாருக்கும் பாதகமாக இல்லாமல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதிய நிலையில், இரு தரப்பினரும் ஆளுக்கொரு திசையில் செல்கின்றனர்.
அதிமுகவில் ஏற்பட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ் பிளவைத் தொடர்ந்து, ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கி, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் யாரை அங்கீகரிக்கிறது என்பதை விட பாஜக தலைமை யாரை அங்கீகரிக்கிறது என்பதுதான் பிரதான கேள்வியாக எழுந்துள்ளது.
இதனால், மத்திய அரசின் நகர்வுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்நிலையில் தான் மத்திய அரசின் இருவேறு துறைகள், பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது ஓபிஎஸ் தரப்பை கொந்தளிக்கச் செய்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி தரப்பினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

முக்கியமான கேள்வி
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பாக மோதல் ஏற்பட்ட நிலையில், அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் வழக்கு தொடுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே, உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் யாரை அங்கீகரிக்கிறது என்பதை விட பாஜக தலைமை யாரை அங்கீகரிக்கிறது என்பது முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளது. பாஜக ஆதரவு இருப்பவருக்கு சாதகமான முடிவுகளே வரும் என்று கூறப்படுகிறது.

அங்கீகாரம்?
சில வாரங்களுக்கு முன்னர் ஜி20 மாநாடு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய அரசு அனுப்பிய அழைப்புக் கடிதத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினார். தான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். சமீபத்தில், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி சமர்ப்பித்த வரவு செலவு கணக்கை ஏற்று இணையதளத்தில் வெளியிட்டது. இதனால், அவரை கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால், ஓபிஎஸ் தரப்பினரோ தங்களுக்கு பின்னடைவு இல்லை என்று கூறி வருகின்றனர்.

சாதகமான லெட்டர்
இந்த நிலையில், மத்திய சட்ட ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்டு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இது ஓபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவிற்குச் சென்ற ஓபிஎஸ், பாஜகவின் முன்னணி தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். பாஜக தலைமைக்கு ஓபிஎஸ்ஸே நெருக்கமான நபர் என்ற வகையில் ஓபிஎஸ் தரப்பினர் பேசி வருகின்றனர். இப்படியான சூழலில் மீண்டும் டெல்லியில் இருந்து எடப்பாடிக்கு சாதகமான லெட்டர் வந்தது ஓபிஎஸ்ஸை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பரபரத்த ஓபிஎஸ் அணி
மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என ஏற்று கடிதம் அனுப்பியுள்ளது, மத்திய அரசு எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து உள்ளது என்பதையே காட்டுவதாக ஈபிஎஸ் தரப்பினர் கூறுகின்றனர். எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என்று மத்திய சட்ட ஆணையம் குறிப்பிட்டுள்ளது தவறானது, இதனால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பது ஓபிஎஸ் தான், அதனால் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், இதுவரை மத்திய சட்ட ஆணையத்திடம் இருந்து இதற்கு பதில் வரவில்லை.

தேர்தல் ஆணையம்
இந்த சூழலில் தான், புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்து தருவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்து தேர்தல் ஆணையம் கருத்து கேட்டுள்ளது. வரும் ஜனவரி 16-ஆம் தேதி கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் கூட்டத்திற்கான கடிதம் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓபிஎஸ் தரப்பு சொல்வது போல தேர்தல் ஆணையம், இதுவரை எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை, ஒருங்கிணைப்பாளர் பதவியே தொடர்கிறது என ஓபிஎஸ் அணியினர் கூறி வருகின்றனர்.

ஓபிஎஸ் - வைத்திலிங்கம் - பாயிண்ட்
மேலும், டெல்லியில் தம்பிதுரை எம்.பி மூலம் லாபி செய்து பொதுச் செயலாளர் எனக் கேட்டு கடிதத்தை பெற்றிருக்கிறார்கள். ஆனால், தேர்தல் ஆணையம் சரியாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டே கடிதம் எழுதி இருக்கிறது என்கிறார்கள் ஓபிஎஸ் அணியினர். மேலும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் உள்ளார். இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் இருக்கிறார். எனவே, அவர்களுக்கே தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது, எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என்கின்றனர்.

திருப்பி அனுப்பிய அதிமுக
இந்தநிலையில், அதிமுக தலைமைக் கழகத்திற்குச் சென்ற இந்த கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். மேலும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே தற்போது இல்லை என்று அந்த கடிதத்தை மீண்டும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இந்தக் கடிதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை என்று ஈபிஎஸ் அணியின் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கூறுகின்றனர்.

அதிகரிக்கும் குழப்பம்
தேர்தல் ஆணையம், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தையும் ஏற்கிறது. அதே நேரத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவருக்கும் கடிதத்தையும் அனுப்புகிறது. இப்படியாக அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் குழப்பங்களையே ஏற்படுத்தி வருகிறது என பலரும் விமர்சிக்கின்றனர். மேலும், மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரத்துறை, மத்திய சட்ட ஆணையம் ஆகியவை அனுப்பியுள்ள கடிதங்களும் அதிமுகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.

பாஜக பிளான்?
அதிமுக தலைமை விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு, தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம் போன்றவை அனுப்பும் கடிதங்கள், உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையில் முக்கிய ஆவணங்களாக தாக்கலாக வாய்ப்புள்ளது. இது அதிமுக தலைமை தொடர்பான குழப்பத்தை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. மேலும், பாஜக - அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமியை தங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்கு தேர்தல் ஆணையத்தை பாஜக பயன்படுத்தக்கூடும், அதற்கான மூவ்களை பாஜக எடுத்து வருகிறது என்றும் அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கின்றனர்.
-
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications