Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2016ல் சோலியை முடித்த மக்கள் நலக் கூட்டணி! இப்போ 5ல் 4 கட்சி திமுகவில்! காலம் மாறி.. காட்சியும் மாறி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026ல் திமுக இரண்டாவது முறையாக திமுக தோற்க காரணமாக இருந்த மக்கள் நல கூட்டணியில் இருந்த ஐந்து கட்சிகளில் நான்கு கட்சிகள் தற்போது திமுகவில் இணைந்திருக்கின்றன. மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வரிசையில் தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் மட்டும் அதிமுக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2006 - 2011 வரையிலான ஆட்சிக் காலத்தில் திமுக மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. அதற்கு முன்னர் கட்சி ஆரம்பித்து மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவற்றை தனித்து சந்தித்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் 2011இல் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார்.

கட்சி ஆரம்பித்ததில் இருந்து விஜயகாந்த் மறையும் வரை திமுகவுடன் கூட்டணி அமைத்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறது தேமுதிக.

Tamil Nadu Assembly Election 2026 DMDK DMK

தேமுதிக திமுக கூட்டணி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பில், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்கே சதீஷ் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, மகளிர் அணி செயலாளர் கனிமொழி, அமைச்சர்கள் எவ வேலு, சேகர் பாபு ஆகியோரை சந்தித்து கூட்டணியில் சேர்ந்து கொண்டனர். ஆறு முதல் எட்டு தொகுதிகள் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேமுதிகவுக்கு வழங்கலாம் என சொல்லப்படுகிறது. அமையவே அமையாது என எதிர்பார்க்கப்பட்ட திமுக தேமுதிக கூட்டணி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த்

குறிப்பாக கடந்த 2016இல் திமுக தோல்வியடைய தேமுதிக ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ல் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து அந்த கட்சியை எதிர்க்கட்சி ஆகிய அதிமுக, அதற்குப் பிறகு விஜயகாந்தின் செயல்பாடுகளால் கோபமடைந்து அந்த கட்சியை கூட்டணியில் இருந்து விலக்கியது. 2016ல் தனித்துப் போட்டி, இரட்டை இலை சின்னத்தில் போட்டி என சூளுரைத்து களம் கண்டார் ஜெயலலிதா. 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுகவினரும், கூட்டணி கட்சியினரும் போட்டியிட்டனர்.

திமுக கூட்டணி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே இருந்தன. அதற்கு முன் அதிமுக திமுக கூட்டணியில் பயணித்த மதிமுகவின் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் ஜிகே வாசன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மக்கள் நல கூட்டணியை உருவாக்கின. இதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருந்தார்.

மக்கள் நல கூட்டணி

தொடர்ந்து தேமுதிக திமுக பக்கம் சாயலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலம் நழுவிக் கொண்டிருக்கிறது.. விரைவில் பாலும் பாலில் விழும் என நம்பிக்கை வைந்திருந்தார் கலைஞர் கருணாநிதி ஆனால் அதிமுகவுக்கும் செல்லாமல் திமுகவுக்கும் செல்லாமல் வைகோவின் மக்கள் நல கூட்டணியில் இணைந்தது தேமுதிக. 124 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட, மீதமுள்ள 100 தொகுதிகளில் தமாக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது இந்த கூட்டணி. அதற்குப் பிறகு காலங்கள் மாறியது. காட்சிகளும் மாறியது.

திமுக - அதிமுக

2019 மக்களவைத் தேர்தலில் மதிமுக விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆகியவை திமுக கூட்டணியில் இணைந்தன. தற்போது வரை அந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது. ஆனால் ஜி கே வாசன் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்தார். அதற்குப் பிறகு பாஜகவும் அதிமுகவும் கைகோர்த்தன. தற்போது வரை அந்த கூட்டணி தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிமுக தயவில் மாநிலங்களவை எம்பி ஆனார் ஜி கே வாசன்.

2026 தேர்தல்

இந்த நிலையில் 2016 சட்டமன்றத் தேர்தலின் போது ஒரு அணியாக களம் கண்ட மக்கள் நல கூட்டணியில் இருந்து ஐந்து கட்சிகளில் நான்கு கட்சிகள் தற்போது திமுகவில் இணைந்திருக்கின்றன. ஜி கே வாசன் அதிமுகவில் இருக்கிறார். 2016 போல 2026லும் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? திமுக தரப்பில் இருக்கும் கட்சிகள் அதற்கு உதவுமா? என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+