இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்!
சென்னை: ஒருபுறம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் போட்டியிட விருப்பமனு அளித்த கட்சியினரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். திமுகவில் 7 தொகுதிகளில் ஒருவர் பெயரில் மட்டும் விருப்ப மனு அளித்துள்ளனர். இதனால், இந்த 7 தொகுதிகளில், விருப்ப மனு அளித்துள்ள நபர்களுக்கே சீட் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதியும், புதுச்சேரிக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக தேர்தலுக்காக இதுவரை இல்லாத அளவிற்கு 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவிற்கு நான்கு தொகுதிகளும், இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், கொ.ம.தே.க கட்சிகளுக்கு 2 தொகுதிகளும், ம.ம.க 2 தொகுதிகளும், சிபிஐ-க்கு 5 தொகுதிகளும் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விசிக மற்றும் தேமுதிகவிற்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சட்டசபை தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் நேர்காணல் செய்து வருகிறார். திமுக சார்பில் போட்டியிடுவதற்காக பிப்ரவரி 20 முதல் மார்ச் 6 வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்பட 15,372 பேர் விருப்ப மனுக்களை வழங்கினர். இந்த நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 17 ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தத் தொடங்கினார்.
முதலில் புதுச்சேரியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்றது. 18 ஆம் தேதி கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான விருப்ப மனு அளித்திருந்த வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினார்.
திமுகவில் 7 தொகுதிகளில் ஒருவர் பெயரில் மட்டும் விருப்ப மனு அளித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அனைத்து விருப்ப மனுக்களும் ஸ்டாலின் பெயரிலேயே வழங்கப்பட்டுள்ளன. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவிர வேறு யார் பெயரிலும் விருப்ப மனுக்கள் வரவில்லை.
அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, மூர்த்தி ஆகியோரின் தொகுதிகளில் இவர்களை தவிர யார் பெயரிலும் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பய்டவில்லை. எனவே இவர்கள் அனைவரும் அதே தொகுதிகளில் மீண்டும் களமிறங்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
-
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
காமராஜரை டெல்லி வீட்டில் வைத்து கொளுத்த பார்த்தது சங்கி கூட்டம்! ஸ்டாலின் குற்றச்சாட்டு! -
வெறும் ரூ.51,237 மட்டும் தான்.. இடும்பாவனம் கார்த்திக் - வீரப்பன் மகளின் சொத்து மதிப்பு இதுதான்! முழு விவரம் -
“எனக்கு ஓட்டு போட்டா போடு.. இல்லைனா போ.. தெம்பு இருக்கிறவர நின்னு கத்தி செத்துக்கூட போவேன்” - சீமான் -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில்











Click it and Unblock the Notifications