• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திடீர்னு நுழைந்த ஸ்டாலின்.. சபரீசனுடன் பிரசாந்த் கிஷோர் ரூமுக்குள் சென்று.. திக்குமுக்காடி போன ஐபேக்

|

சென்னை: திடுதிப்பென்று இப்படி ஸ்டாலின் உள்ளே வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஐபேக் ஆபீசுக்குள் ஸ்டாலின் நுழைந்து, அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.

  திடீர்னு நுழைந்த ஸ்டாலின்.. சபரீசனுடன் பிரசாந்த் கிஷோர் ரூமுக்குள் சென்று.. திக்குமுக்காடி போன ஐபேக் - வீடியோ

  இந்த முறை எதிர்க்கட்சிகள் வறுத்தெடுத்ததோ இல்லையோ, திமுகவில் உள்ள சில மூத்த தலைகள் பொருமளவில் வறுத்தெடுத்துக் கொண்டே இருந்தனர்..

  சீனியர்களை ஓரங்கட்டிவிட்டதாக இவர்கள் புலம்ப தொடங்கி விட்டனர்.. வாரிசுகளை உள்ளே கொண்டு வர முடியாமல் போகிறதே என்று தவிக்க தொடங்கிவிட்டனர்.. இந்த முறையும் தமக்கு சீட் இல்லாமல் போகிறதே என்று கலங்கி போய்விட்டனர்.. இதற்கெல்லாம் காரணம் ஐபேக்..!

  ஐபேக்

  ஐபேக்

  வடநாட்டில் இருந்து ஆட்களை கொண்டு வந்து அவர்கள் பேச்சை கேட்டு ஸ்டாலின் நடக்கிறாரே, திராவிட சித்தாந்தத்துக்கு மாறாக இந்துத்துவத்தை உள்ளே புகுத்த முனைவார்களோ, என்ற பல விமர்சனங்களும் இந்த ஐபேக் டீம் மீது எழவே செய்தது. என்ன ஆனாலும் சரி, இந்த முறை திமுக வெற்றி பெறுவது,10 வருடங்களில் விட்டதை பிடிப்பது என்ற முனைப்பில்தான் அக்கட்சி தலைமை இந்த முடிவெடுத்தது..

   பிரசாந்த் கிஷோர்

  பிரசாந்த் கிஷோர்

  இதற்காகவே பிரசாந்த் கிஷோர் தலைமையிலான டீமை ஒப்பந்தமும் செய்தது... இந்த டீம் என்ன சொல்கிறதோ, அதை அப்படியே கேட்டு நடக்கும் முடிவுக்கு ஸ்டாலின் வரவே செய்தார். அதற்கேற்றபடி, ஐபேக் டீமும் சும்மா இல்லை. களப்பணி என்றால் என்ன என்பதை, தொகுதி வாரியாக, மண்டல வாரியாக, ஒன்றியம் வாரியாக, இறங்கி, தூர்வாரி காட்டியது.. தன் கட்சி மட்டுமல்ல, கூட்டணி கட்சிகளும் மெஜாரிட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஐபேக் டீம் இறங்கியது சற்று வியப்புதான்.

   மெஜாரிட்டி

  மெஜாரிட்டி

  விளைவு... கருத்து கணிப்புகளில் அசால்ட்டாக வெளிப்பட்டது.. திமுகவின் தனித்துவமும், மெஜாரிட்டியான வெற்றிகளையும் அந்த கருத்து கணிப்புகள் எடுத்துக்காட்டி விட்டு சென்றுள்ளன.. இதற்கெல்லாம் காரணம் ஐபேக் டீம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.. இந்த ஐபேக் டீம் தலைமை அலுவலகம் சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வருகிறது.

   ஊழியர்கள்

  ஊழியர்கள்

  இந்த ஆபிசுக்குதான் திடீரென நேற்று ஸ்டாலின் வந்துவிட்டார்.. ஆபீசுக்குள் ஊழியர்கள் வேலை செய்து கொண்டு படுமும்முரங்களில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போதுதான், டக்கென உள்ளே வந்தார் ஸ்டாலின், அவருடன் சபரீசனும் வந்திருந்தார். ஸ்டாலினை பார்த்ததும், ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஒரு செகண்ட் திளைத்து போய்விட்டனர்.. அனைவருக்கும் வணக்கம் சொல்லி கொண்டே வந்த ஸ்டாலின், பிரசாந்த் கிஷோரை சந்திக்க உள்ளே சென்றார். அவருக்கு தன் நன்றியை தெரிவித்து கொண்டார் ஸ்டாலின்.

   தொகுதிகள்

  தொகுதிகள்

  அங்கு, தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தினார்... வாக்குப்பதிவு முடிந்த பிறகு திமுக எத்தனை தொகுதிகளில் வெற்றிபெறும் என்கிற கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டது... அந்த ரிப்போர்ட்டும் ஸ்டாலினிடம் ஐபேக் தந்தது.. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், தேர்தலுக்கு முன்பாக ஐபேக் நிறுவனம் தந்த ரிப்போர்ட்டில் 180 தொகுதிகள் வரை திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று கூறப்பட்டது..

   தொண்டர்கள்

  தொண்டர்கள்

  ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஏற்கனவே கணித்ததைவிட அதிக தொகுதிகளை உறுதியாக திமுக கூட்டணி வெல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை கேட்டதும் ஸ்டாலின் உட்பட அனைவருமே மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. 10 வருடங்கள் கழித்து திமுக தொண்டர்களின் முகத்திலும் இதே சந்தோஷம் தென்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது..!

   
   
   
  English summary
  DMK Leader MK Stalin thanked I PAC Prasanth Kishore
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X