Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் எங்கே போட்டியிட்டாலும் விடக்கூடாது.. திமுக போட்ட பக்கா பிளான்? காத்திருக்கும் ஆசிட் டெஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம், நாகை உள்ளிட்ட ஏதேனும் ஓரு தொகுதியில் விஜய் போட்டியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், விஜய் எங்கு போட்டியிட்டாலும் அங்கு திமுக எதிர்த்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வேளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் விஜய் போட்டியிட்டால், அங்கும் திமுகவே போட்டியிட திமுக முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் விஜய்யை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் திமுக அதிரடி திட்டத்தை கையில் வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

DMK May Field Its Own Candidate Regardless of Which Constituency TVK Vijay Contests

தவெக விருப்ப மனு

தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. தவெகவில் நேற்று விருப்பமனு வினியோகம் தொடங்கியது. முதல் நாளிலேயே 10 ஆயிரம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன்.

நேற்று பனையூரில் திரண்ட கூட்டம் அங்குள்ள குடியிருப்பு வாசிகளை அதிருப்தி அடைய வைக்கும் அளவுக்கு இருந்தது. விருப்பமனு வாங்க கூட்டம் திரண்டது. விருப்ப மனுக்களை பலரும் விஜய் பெயரில் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதாவது விஜய் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை பெற்றுள்ளனர்.

விஜய் போட்டியிடும் தொகுதியில்

விஜய்யை பொறுத்தவரை தனது வி செண்டிமண்ட்டை தொகுதி விஷயத்திலும் தொடருவார் என்று சொல்லப்படுகிறது. அதாவது, வேளச்சேரி, விக்கிரவாண்டி, விருகம்பாக்கம் மற்றும் நாகை உள்ளிட்ட ஏதேனும் ஓரு தொகுதியில் விஜய் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிற்து. விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் சரி.. அவருக்கு எதிராக நேரடியாக திமுகவே போட்டியிட முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒரு வேளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் விஜய் போட்டியிட்டால், அங்கும் திமுகவே போட்டியிட திமுக முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய்யை எப்படியாவது சட்டமன்ற தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் திமுக அதிரடி திட்டத்தை கையில் வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

தனித்து களமிறங்கும் தவெக

சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை விஜய் கட்சி, தனித்து போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறேன் என கடையை விரித்து காத்திருந்த போதும் எந்த ஒரு கட்சியும் விஜய் பக்கம் போகவில்லை. இதனால், வேறு வழியின்றி 234 தொகுதிகளிலும் விஜய்யின் தவெக தனித்தே களமிறங்கும் என்று கூறப்படுகிறது.

கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு தங்கள் பக்கம் சில கட்சிகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பு தவெகவிடம் உள்ளது. ஆனால் தற்போதய நிலவரப்படி திமுக கூட்டணி உறுதியாக உள்ளதால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அதேநேரத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் இந்த முறை எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் வேண்டும் என்று திமுகவிடம் டிமாண்ட் வைத்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. காங்கிரஸின் இந்த கோரிக்கை திமுகவிற்கு சற்றே அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. இதனால், தொகுதி பங்கீட்டு உள்ளிட்டவை குறித்த பேச்சுவார்த்தை என கூட்டணியில் அடுத்த கட்ட நகர்வுகள் இல்லாமல் உள்ளது.

வலுவாக திமுக கூட்டணி

இது ஒருபக்கம் இருக்க திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்டுப்பெறுவதில் தீவிரமாக உள்ளது. இதையெல்லாம் வைத்துக்கொண்டுதான், திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் நம் பக்கம் வருமா? என்ற எதிர்பார்ப்புடன் தவெக காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் தற்போதய அரசியல் நகர்வுகளை வைத்து பார்க்கும் போது அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் திமுக கூட்டணி உடைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+