பாமக ராமதாஸ் தரப்புடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா? டிகேஎஸ் இளங்கோவன் கொடுத்த பதில்!
சென்னை: பாமக ராமதாஸ் தரப்புடன் திமுக பேசி வருவதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இருப்பினும் பாமக கூட்டணி குறித்த முழுமையான விவரங்கள் என்னிடம் இல்லை என்று கூறிய டிகேஎஸ் இளங்கோவன், இன்னும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் காரணமாக இரு அணிகளாக பிரிந்து நிற்கிறது. இரு தரப்பும் மாம்பழ சின்னத்தை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். இதனிடையே அன்புமணி தரப்பு பாமக, என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறது. இந்தக் கூட்டணியில் ராமதாஸ்ஸை சேர்க்க கூடாது என்பதிலும் அன்புமணி பிடிவாதமாக இருக்கிறார்.

அதேபோல் ராமதாஸ் தரப்பில் பல்வேறு தரப்புடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் ராமதாஸ் தரப்புடன் கூட்டணி அமைத்தால், அது தலித் வாக்குகளை பாதிக்கும் என்று திமுக கருதுகிறது. அது விஜய்க்கு சாதகமாக அமையும் என்றும் பார்க்கப்படுகிறது. இதனால் திமுக தலைமை ராமதாஸ் தரப்பை கூட்டணியில் இணைக்க தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் பங்கு என்ற குரல் எழுந்துள்ளது. இவையெல்லாம் பேச்சுவார்த்தையின் போது பேசப்பட வேண்டியது. இதுவரை திமுக தலைமையில் ஏராளமான முறை கூட்டணி பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அவையெல்லாம் மிகவும் சுமூகமாக நடத்தப்பட்டிருக்கிறது.
சில கட்சிகள் திமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். அதேபோல் பாமக ராமதாஸ் தரப்புடன் பேசி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதுகுறித்த முழு விவரம் இல்லை. சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருப்பதால், அவை அதன் போக்கில் நடக்கும்.
இந்த கூட்டணியே வலுவாக உள்ளது. மேலும் சில கட்சிகள் வந்தால், அவர்களையும் வரவேற்போம். 2021 சட்டசபைத் தேர்தலின் போது திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கேலி பேசினார். செய்ய முடியாது என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றார். ஆனால் திமுக ஆட்சியில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications