பரோட்டாவுக்கு திமுகவினருக்குள்ளே பாக்சிங்! குருமா வாளி பறந்த பயிற்சிபாசறை! கலவர காடாக மாறிய மண்டபம்!
சென்னை : சென்னையில் நடைபெற்ற திமுக பயிற்சிப் பாசறை கூட்டத்திற்குப் பின் பஃபே சிஸ்டம் மூலம் வழங்கப்பட்ட பரோட்டாவிற்கு திமுகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இளைஞர்களுக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது கழக துணை பொதுச்செயலாளர் இராசா பங்கேற்று இளைஞர்களுக்கான சிறப்புரை ஆற்றினார்.
பெண்களுக்கு சம உரிமை, ஜாதிமத வேறுபாடற்ற சம உரிமை உள்ளிட்ட கருத்துக்களை அருமையாக பேசி இளைஞர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

திமுக பயிற்சி பாசறை
பின்னர் இதனை தொடர்ந்து வடசென்னை பகுதிகளில் இருந்து அங்கு வந்திருந்த இளைஞர்களுக்காக அறுசுவை விருந்து தயார் படுத்தப்பட்டிருந்தது. விருந்து உண்பதற்காக இளைஞர்கள் சென்ற பொழுது அங்கு பஃபே சிஸ்டம் மூலமாக உணவு வழங்கப்பட்டது.

பரோட்டா குழம்பு
பரோட்டா கறி குழம்பு என தடபுடலாக உணவு தயார் படுத்தப்பட்டிருந்த நிலையில் சிறிது நேரத்திலேயே பரோட்டா காலியானதால் இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் உணவு தயாரிக்கும் இடத்திற்கே சென்று பரோட்டா தயாரிக்கும் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பரோட்டா அடுப்பில் போட்டு சுட்டு கொடுக்கும் அடுத்த நொடியே பரோட்டோவை அடித்துக்கொண்டு பிடுங்கி சென்றனர்.

தொண்டர்களுக்குள் சண்டை
தங்களுக்கு பரோட்டா கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஏக்கத்தில் தடபுடலாக உணவகத்தை போர்க்களம் போல் மாற்றினார். அதேபோல் தங்களது கழுத்தில் அணிந்திருந்த திராவிட மாடல் பாசறை கார்டை பங்க்ஷன் முடிந்த சிறிது நேரத்திலேயே இளைஞர்கள் கழட்டி தூக்கி எறிந்து விட்டு சென்றனர்.

கடும் விமர்சனம்
அமைச்சரோடு நின்று புகைப்படம் எடுக்கும் பொழுது அனைத்து இளைஞர்களும் ஒன்றாக ஐடி கார்டை தூக்கி காட்டி தாங்கள் அடையாளப்படுத்திய நிலையில் மண்டபத்தை விட்டு வெளியே வந்தவுடன் அந்த ஐடி கார்டை ரோட்டிலேயே தூக்கி எறிந்து விட்டு சென்றனர். இந்நிலையில் பரோட்டாவிற்கு திமுகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications