நினைச்ச நேரமெல்லாம் உறவு வேண்டாம்.. 'சில நேரங்களில்' கட்டாயம் தவிர்க்கனும்.. டாக்டர்கள் அட்வைஸ்
சென்னை: மனிதன் வருடம் முழுவதும் பெரும்பாலான நாட்கள் செக்ஸ் கொள்வதற்கு ஏற்றார் போல் இயற்கையால் பரிணாமமடைந்திருந்தாலும் சில நேரங்களில் கட்டாயமாக உடலுறவை தவிர்ப்பது சிறந்தது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உதாரணமாக தங்கள் இணையுடன் சண்டையில் இருக்கிறீர்கள் எனில் அப்போது நிச்சயம் உடலுறவை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், போதை பொருட்களை பயன்படுத்தும் போதும் உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிரச்னையின் போது
முதல் காரணத்திற்கு மருத்துவர்கள் கூறும் விளக்கம் இதுதான். அதாவது, ஒரு இணைக்குள் இருக்கும் சில முரண்பாடுகளை நிவர்த்தி செய்வது கடினம். எனவே அந்த சூழலிலிருந்து விலகுவதாக நினைத்து உடலுறவில் ஈடுபட முயன்றால் அது மேலும் சிக்கலைதான் உருவாக்கும் என உளவியல் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரச்னை இருக்கும் போது அதுகுறித்து இருவரும் மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும். அல்லது இந்த பிரச்னையின் தீவிரம் குறையும் அளவுக்கு காத்திருக்க வேண்டும். அதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும். மாறாக உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் இப்பிரச்னை தீர்வை நோக்கி நகராது. மேலும் மேலும் பிரச்னை அழுத்தி வைக்கப்படும். பின்னர் ஒருநாள் மிகப் பெரிய அளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று கூறியுள்ளனர்.

போதை
அடுத்த காரணம் போதைப்பழக்கம். சினிமாக்களில் காட்சிப்படுத்துவதை போல இயல்பு வாழ்க்கை இருக்கிறது என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே தற்போதைய சூழலில் பலரும் போதைக்கு அடிமையாகிவிட்டார். இந்நிலையில் நீங்கள் உடலுறவு கொள்ளும்போது உங்களால் இயல்பாக பெரும் சந்தோஷத்தை இதிலிருந்து பெற முடியாது. அதேபோல பாதுகாப்பற்ற உடலுறவுக்கு நீங்கள் தூண்டப்படுவீர்கள் என்றும் ஆய்வு சொல்கிறது. போதை பழக்கம்தான் பெரும்பாலான பால்வினை நோய்களின் தோற்றத்திற்கு காரணமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மட்டுமல்லாது இது உங்களது இணைக்கு கடுமையான வேதனையை உருவாக்கும் என்றும் கூறுகிறார்கள்.

தொற்று
அதேபோல சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டிருப்பின் உடலுறவை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மீறி உடலுறவில் ஈடுபடும்போது அதீத எரிச்சலும், கடுமையான வலியும் ஏற்படுவதுடன், தொற்று பாதிப்பு சரியாக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே இதிலிருந்து குணமடைந்தால் மட்டுமே பாதுகாப்பான உடலுறவு கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதேபோல வாக்சிங் செய்த பின்னர் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பற்ற சூழல்
வாக்சிங் செய்த இரண்டு நாட்களுக்கு பின்னர் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். உடலுறவை தவிர்க்க வேண்டிய முக்கியமான காலகட்டம் மற்றொன்று இருக்கிறது. அதாவது, ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிருப்பின் உடலுறவை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக தங்கள் இணைக்கும் நோய்த்தொற்ற பரவுவதை தவிர்க்க முடியும் என்று கூறுகின்றனர். மேலும் பாதுகாப்பற்ற சூழலில் கண்டிப்பாக உடலுறவில் ஈடுபடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications