விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி
சென்னை: விஜய்க்கு இன்று இரட்டை அதிர்ச்சி காத்திருந்தது என்றே சொல்லலாம். ஒரு பக்கம் ஜனநாயகன் ரிவைசிங் கமிட்டி சென்சார் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் கரூர் விவகாரத்திலும் சிபிஐயிடம் இருந்து விசாரணைக்குச் சம்மன் வந்துள்ளது. இப்படி இரண்டு பக்கத்தில் இருந்தும் விழும் அடியால் விஜய் ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
ஒரு பக்கம் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் சென்சார் விவகாரம் சீக்கிரமே முடியும் எனச் சொல்லப்பட்டது. அதேபோல அரசியலிலும் தீவிரமாக இறங்கிய விஜய், அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிடுகிறார். அவரது தேர்தல் வாக்குறுதிகள் இளைஞர்களிடம் மட்டும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொள்ள தவெகவினர் ரெடியாகினர்.

ஜனநாயகன் சிக்கல்
எல்லா பிரச்சினையும் முடியும் என ரசிகர்களும் தொண்டர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த சூழலில், இன்று ஒரே நாளில் விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி காத்திருந்தது. முதலில் இன்று நடைபெறவிருந்த ஜனநாயகன் மறு தணிக்கை ஒத்தி வைக்கப்பட்டது. அதாவது ரிவைசிங் கமிட்டியில் படம் பார்க்கவிருந்த உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மறுசென்சார் ஒத்திவைக்கப்பட்டது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும்.
இதில் சிக்கல் என்னவென்றால் இந்த வாரத்திற்குள் படம் சென்சார் ஆனால் மட்டுமே அது ரிலீஸாக வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை சென்சாரில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டால்.. அதற்குள் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும். விஜய் இப்போது முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டதால், அவரது திரைப்படத்தை வெளியாகத் தேர்தல் ஆணையம் அனுமதிக்காது. இதனால் சம்மர் வரை காத்திருக்க வேண்டும். இன்று சென்சார் பஞ்சாயத்து முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மீண்டும் தள்ளிப் போய் இருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுப்பதாக உள்ளது.
அரசியல் பஞ்சாயத்து
அடுத்து அரசியலிலும் அவருக்கு அதிர்ச்சி தான். கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தவெக சார்பில் நடந்த பிரச்சார கூட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பிரச்சார நிகழ்வு ஒன்றில் இத்தனை பேர் உயிரிழந்த கொடூரம் நடப்பது இதுவே முதல்முறை. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தான் இது தொடர்பாக விஜய்யை நேரில் அழைத்து சிபிஐ விசாரித்தது. அப்போது கூட்டத்திற்கு அவர் தாமதமாக வந்தது ஏன்! குளறுபடிகளுக்கு யார் காரணம் என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
மீண்டும் சம்மன்
அப்போதே தேவை என்றால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் எனச் சொல்லியே விஜய்யை அனுப்பி வைத்தனர். இந்தச் சூழலில் தான் நாளை மார்ச் 10ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர். இதில் விஷயம் என்னவென்றால் நாளை தான் தவெக வேட்பாளர் தேர்வைத் தொடங்க விஜய் தரப்பு திட்டமிட்டு இருந்தது. வேட்பாளர்களை விஜய் தனிப்பட்ட முறையில் நேர்காணல் செய்வார் எனச் சொல்லப்பட்டது. சட்டசபைத் தேர்தலுக்கு இது ரொம்பவே முக்கியமான ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் அதற்கு செக் வைக்கும் வகையில் சிபிஐ சம்மன் வந்துள்ளது.
இரட்டை அதிர்ச்சி
இப்படி ஒரே நாளில் இரட்டை அதிர்ச்சி விஜய்க்கு கிடைத்துள்ளது. ஒரு பக்கம் சினிமா, மற்றொரு பக்கம் அரசியல் என இரண்டிலும் பயணிக்க நினைத்த விஜய்க்கு, இரண்டு பக்கமும் பயங்கர அடி விழுந்துள்ளது. ஆனாலும், பஞ்சாயத்து எல்லாம் முடிந்து, எல்லாம் சுமுகமாகப் போக வேண்டும் என்பதே விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன? -
விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார்












Click it and Unblock the Notifications