Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது கொடுமைக்கு முடிவே இல்லையா? - டாக்டர் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் கைது கொடுமைக்கு முடிவே இல்லையா என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Dr Ramadoss, TTV Dhinakaran condemn arrest of TN Fishermen

இது தொடர்பாக ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அவர்களின் படகுகளுடன் சிங்களப்படை கைது செய்திருக்கிறது. சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது; இதை இனியும் இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது!

Dr Ramadoss, TTV Dhinakaran condemn arrest of TN Fishermen

ஜனவரி 31-ஆம் தேதி 21 பேர், பிப்ரவரி 8-ஆம் தேதி 11 பேர், இன்று 12 பேர் என கடந்த இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 3 முறை 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிடம் உதவி பெறும் இலங்கை, இந்திய இறையாண்மை மீது தொடர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்கக்கூடாது! இன்று கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் உட்பட இதுவரை கைது செய்யப்பட்ட 44 மீனவர்களையும், அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்! இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் கண்டனம்

Dr Ramadoss, TTV Dhinakaran condemn arrest of TN Fishermen

தமிழக மீனவர்கள் கைதுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். டி.டி.வி. தினகரன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழக மீனவர்கள் அண்மைக்காலமாக அடுத்தடுத்து சிறை பிடிக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், படகுகளைக் கைப்பற்றி ஏலம் விடுவதுமான இலங்கை அரசின் அட்டூழியங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறோம்? வெறுமனே கடிதங்களை எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதாக மத்திய, மாநில அரசுகள் நினைப்பது கண்டனத்திற்குரியது. தனுஷ்கோடி அருகே மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்கசெய்வதுடன், இனிமேலும் இந்த அவலம் தொடராமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+