குளிர் காலத்தில் தயிர் சாப்பிடலாமா? உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா.. இதை தெரியாமல் தொட்றாதீங்க
சென்னை: தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்றாலும், குளிர் நேரத்தில் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா? என பலருக்கும் சந்தேகம் ஏற்படும். தயிர் சாப்பிட்டால் சளி, இருமல் வந்துவிடுமோ என சிலர் பயந்து தவிர்ப்பார்கள். குளிர் காலத்திலும் தயிரை சாப்பிடலாம் இதனால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். அதேசமயத்தில் சிலர் அதை தவிர்ப்பதே நல்லது.
நாம் உண்ணும் உணவே மருந்து என முன்னோர்கள் சொல்வதுண்டு. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு என்றும் கூறுவார்கள். அப்படித்தான் நாம் சில உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குளிர் காலத்தில் தயிர் சாப்பிடலாமா?
உதாரணமாக தயிர் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடியது. தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதனாலும், கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் இருப்பதனாலும் நம் எலும்புகள், பற்கள் பலமாக இருப்பதற்கு உதவுகின்றது. எனவே தயிரை நம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
கோடைக்காலத்தில் நாம் தயிர் அதிகமாகவே சாப்பிடுவோம். ஆனால் குளிர் காலங்களில் தயிரை சாப்பிட்டால் சளி பிடித்துவிடுமோ என பலரும் பயந்து சாப்பிடாமல் தவிர்த்து விடுகிறார்கள். தயிரில் உள்ள ஊட்டச்சத்துகள் ஏராளமான நன்மைகளை அளிக்கக்கூடியது. சளி, இருமல் ஏற்படாத வண்ணம் தயிரை எப்படி சாப்பிலாம் என இங்கு பார்க்கலாம்.
எப்போதெல்லாம் சாப்பிடலாம்
குளிர் காலத்தில் வானிலை ஜில்லாக இருக்கும். இந்த நேரத்தில் நாம் பிரிட்ஜில் வைத்து இருக்கும் தயிரை எடுத்து அப்படியே ஜில்லாக சாப்பிடக் கூடாது. அரை மணி நேரம் வெளியில் வைத்து அறை வெப்பநிலைக்கு வந்த பிறகு நாம் உணவோடு சேர்த்தோ, ஜூஸ் போன்றோ அருந்தலாம்.
குளிர்ந்த அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்த தயிரை நாம் அப்படியே சாப்பிட்டால் உடல் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி அடையக்கூடும். இது தொண்டை வலி அல்லது சளிக்கு வழி வகுக்கும். எனவே இந்த தவறினை செய்துவிடாதீர்கள்.
தயிரை பொறுத்தவரை காலை மற்றும் மதிய நேரங்களில் சாப்பிடலாம். இரவில் தயிர் சாப்பிட கூடாது. அதன் குளிர்ச்சித்தன்மை உடல் வெப்பநிலையை மேலும் குறைத்து சளியை அதிகரிக்க செய்திடும்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது
இருமல், சளி, சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவதை குறைத்து கொள்ளலாம் அல்லது முற்றிலும் தவிர்த்துவிடலாம்.
தயிர் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்
* தயிர் சாப்பிடுவதால் உடல் அஜீரண கோளாறு சரியாகும்.
* தயிர் சாப்பிடுவது உணவை எளிதில் ஜீரணிக்க உதவும்.
* தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும்.
* தயிரில் இருக்கும் கால்சியம், வைட்டமின் டி போன்ற சத்துக்கள் எலும்புகள், பற்களை வலுப்படுத்த உதவும்.
* குளிர் காலத்தில் தோல் வறண்டு போவதை தவிர்த்து பளபளவென மாற்ற தயிர் உதவும்.
* வழக்கமாக குளிர்காலத்தில் நம் உடல் குளிர்ந்துவிடாமல் இருக்க வெப்பத்தை உருவாக்கும். இப்படி உடல் சூடாக இருக்க அதிக கலோரிகள் எரிக்கப்படும். இதனால் அடிக்கடி குளிர்காலத்தில் பசி எடுக்கும். இதனால் குளிர்காலங்களில் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட தோன்றும். இதனை கட்டுப்படுத்த தயிர் முக்கிய பங்காற்றும்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications